தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு உணவில் கலப்படம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு உணவில் கலப்படம் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
இரண்டாவது முறையாகப் பதவி யேற்றுள்ள பா.ஜ.க அரசின் முதல் மழைக் காலக் கூட்டத்தொடர் கடந்த சில தினங்களாக நாடாளு மன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.அதன்படி நேற்று உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் இந்தியாவில் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு எழுத்து ரீதியாக பதில் அளித்துள்ளார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான். 
உணவில் கலப்படம்
அவர் அளித்துள்ள பதிலில், ``உணவுக் கலப்படத்தில் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு கலப்படம் உள்ளது. மாநில அரசுகளி லிருந்து பெறப்பட்ட அறிக்கைகளில் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழக உணவில் கலப்படம்2016- 17 மற்றும் 20018-19 ஆகிய ஆண்டுகளில் தரமற்ற உணவு களைத் தயாரித்ததாக 8100 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். உணவுக் கலப்பட அபராதத் தொகையாக இந்தியா முழுவதும் 43 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 65,000 பொருள்களில் நடந்த சோதனையில் 20,000 பொருள்களில் கலப்படம் இருந்துள்ளது. 
உணவு மற்றும் நுகர்வோர் துறை
தமிழகத்தில் 5,730 பொருள்களில் நடந்த சோதனை யில் 2,601 பொருள்களில் கலப்படம் செய்யப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 19,170 பொருள்களில் நடந்த சோதனையில் 9,403 பொருள்களில் கலப்படம் செய்யப் பட்டுள்ளது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause