500 ரன், நான்கு சதம் எடுத்து சாதனைகளில் இடம் பிடித்த ஹிட்மேன் !

0
ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ள ரோகித் சர்மாவை ரசிகர்கள் செல்லமாக ‘ஹிட்மேன்’ என்று அழைத்து வருகின்றனர். ஹிட்மேன் இந்த உலக கோப்பையில் நம்ப முடியாத அளவிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 
500 ரன், நான்கு சதம் எடுத்து சாதனைகளில் இடம் பிடித்த ஹிட்மேன்



தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒரே உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா சாதனையை சமன் செய்துள்ளார். 
இருவரும் நான்கு சதங்கள் விளாசி யுள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் 96 ரன்கள் அடித்திருக்கும் போது 533 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் உலக கோப்பையில் 500 ரன்களை தாண்டி யிருந்தார். 

அதன் பின் தற்போது ரோகித் சர்மா 500 ரன்களை தாண்டி சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். வார்னர் 516 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)