குற்றாலம் அருகே கார், லாரி மோதல் - அதிகாரிகள் 3 பலி !

0
தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஐந்து பேர் குற்றாலம் அருவிக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். 
குற்றாலம் அருகே கார், லாரி மோதல்



அதன் படி தனியார் நிதி நிறுவனத்தின் புதுக்கோட்டை மேலாளர் பாண்டீஸ்வரன், பொன்னமராவதி மேலாளர் ரமேஷ், புதுக்கோட்டை மண்டல மேலாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் மேனேஜர் விஜயகுமார், ஆலங்குடி மேனேஜர் காஜா மைதீன் ஆகிய ஐந்து பேரும் ஒரே காரில் குற்றாலம் வந்துள்ளனர். 
குற்றாலத்தில் சீசன் அருமையாக இருக்கும், அருவிகளில் தண்ணீர் கொட்டும் என நம்பி வந்த நிலையில், அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுவதால் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் குற்றாலத்தில் இருந்து கேரளாவின் பாலருவிக்குச் சென்றால் அங்கு ஆனந்தமாகக் குளிக்கலாம் எனத் திட்டமிட்டிருக் கிறார்கள். 

அதனால் பாலருவிக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கட்டளைக் குடியிருப்பு என்ற இடத்தின் அருகே கார் செல்லும் போது, கேரளாவில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி எதிர் பாராத விதமாக கார் மீது மோதியது. 

இதில், காரை ஓட்டிச் சென்ற விஜயகுமார், புதுக்கோட்டை மேலாளர் பாண்டீஸ்வரன், பொன்னமராவதி மேலாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 
குற்றாலம் அருகே கார், லாரி மோதல்



பலத்த காயமடைந்த இருவருக்கு செங்கோட்டை அரசு மருத்து மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தென்காசி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். 
இதனிடையே, காயமடைந்த காஜாமைதீன் என்பவர் மேல் சிகிச்சைக் காக பாளையங் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இந்த விபத்து தொடர்பாக புளியங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்து க்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள், போதிய தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள கேரள அருவிக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)