ஆவணத்தை திரும்பித்தர லஞ்சம் கேட்கும் சார்பதிவாளார் !

0
புதுக்கோட்டை மாவட்டம் லேணா விளக்குப் பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 16 ஏக்கர் விவசாய நிலத்தை, பரிசாக, மற்றொரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு எழுதிக் கொடுக்க திட்டமிட்டு இருந்துள்ளனர். 
லஞ்சம் கேட்கும் சார்பதிவாளார்



இதற்காக, இருதரப்பினரும் திருமயம் பதிவாளர் அலுவலகத்திற்கு தங்களது வக்கீல்களுடன் சென்றுள்ளனர். அங்கு, அரசு முத்திரை தொகை ரூ.39 ஆயிரம் செலுத்தி அந்த நிலத்திற்கான ஆவணத்தை பதிவு செய்துள்ளனர்.
உடனே, மகாலெட்சுமி, அலுவலகத்தில் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று ஆவணங் களைக் கொடுப்பதற்கு ரூ.2 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். சார்பதிவாளர் லஞ்சம் கேட்கும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

தொண்டு நிறுவனம் சார்பில், காவல்துறை தரப்பிலும், பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பிலும் இது குறித்து புகார் தெரிவித்தும் மகாலெட்சுமி மீது இது வரையிலும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. லஞ்சம் கேட்கும் சார்பதிவாளர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)