நான் பார்த்தவர்களிலேயே மிகச் சிறந்த ரசிகை - விராட் கோலி !

0
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. 
நான் பார்த்தவர்களிலேயே மிகச் சிறந்த ரசிகை



இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் இந்த போட்டியை காண வந்தனர். அப்போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தார். 
மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது. அவர் வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசை கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார். 

இந்திய வீரர்களால் வெகுவாக கவரப்பட்டார். போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்து இந்திய வீரர்களான விராட் கோலி, டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர் களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரசிகர்களின் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சாருலதா படேல் அவர்களுக்கு என் நன்றி.



87 வயதான போதும் அவருக்கு இருக்கும் உணர்வு பூர்வமான, அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் ஆர்வத்தை கண்ட போது நான் பார்த்ததிலேயே ஒரு தலை சிறந்த ரசிகையாக இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
வயது என்பது சாதாரணமான எண் மட்டுமே. ஆர்வம் தான் நம்மை பல எல்லைகளை தாண்டி கொண்டுச் செல்கிறது. அவரது ஆசியோடு அடுத்த கட்டத்தை எதிர்கொள்வேன்’ என பதிவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)