23 போலி பல்கலைக் கழகங்கள் - யுஜிசி பட்டியல் வெளியீடு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

23 போலி பல்கலைக் கழகங்கள் - யுஜிசி பட்டியல் வெளியீடு !

Subscribe Via Email

நாடு முழுவதும் மொத்தம் 23 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பட்டியல் வெளி யிட்டுள்ளது.
யுஜிசி பட்டியல் வெளியீடு
நாடு முழுவதும் 23 போலி பல்கலைக் கழகங்கள்..! யுஜிசி பட்டியல் வெளியீடு!

தற்போது, யுஜிசி வெளி யிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லத் தக்கதல்ல என்பது குறிப்பிடத் தக்கது.

யுஜிசி பட்டியல்

மாணவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் போலி பல்கலைக் கழகங்களின் பட்டியலை யுஜிசி நிர்வாகம் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். 
அதன்படி, நடப்பு கல்வி யாண்டிற்கான போலி பல்கலைக் கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளி யிட்டுள்ளது.

23 போலி பல்கலை
போலி பல்கலைக் கழகங்களின் பட்டியல்
தற்போது, யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைக் கழகங்களின் பட்டியலில் நாடு முழுவதும் 23 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

தில்லியில் 7 பல்கலை

அதன்படி, தலைநகர் தில்லியில் 7 போலி பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. தில்லி தரியாகஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக் கழகம், புதுதில்லி இந்திய அறிவியல் மற்றும் 
தில்லியில் 7 பல்கலை
பொறியியல் நிறுவனம், ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம், விஸ்வகர்மா சுயவேலை வாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக் கழகம், அதியாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மீகப் பல்கலைக் கழகம்) என 7 பல்கலைக் கழகங்கள் போலியானவை.
உ.பி-யில் 8 பல்கலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசியில் சம்ஸ்க்ருத விஸ்வ வித்யாலயா, மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா, தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக் கழகம், காந்தி ஹிந்தி வித்யாபீடம், 
உ.பி-யில் 8 பல்கலை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக் கழகம், உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா, மஹராணா பிரதாப் சிக்ஷ நிகேதன் விஷ்வ வித்யாலயா, இந்திரபிரஸ்த சிக்ஷ பரிஷத் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் போலியானவை.

ஒடிசாவில் இரு பல்கலை

ஒடிசாவில் இயங்கி வரும் நவபாரத் சிக் ஷ பரிஷத், வடக்கு ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் ஆகிய இரு பல்கலைக் கழகங்கள் போலி யானவை.

தொடரும் பட்டியல்

இப்பட்டியலில் மேற்கு வங்கத்தில் இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம், மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் ஆகிய இரு பல்கலைக் கழகங்களும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ராஜா அரபிக் பல்கலைக் கழகமும், 
தொடரும் பட்டியல் போலி
கர்நாடகத்தில் உள்ள பதகன்வி சர்கார் கல்விச் சமூகத்துக் கான சர்வதேச திறந்தநிலை பல்கலைக் கழகமும், கேரளம் கிஷா நத்தத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகமும், 
புதுச்சேரியில் இயங்கிவரும் ஸ்ரீ போதி உயர்கல்வி அகாதெமி ஆகிய பல்கலைக் கழகங்கள் போலி யானவை என யுஜிசி பட்டியலில் தெரிவித் துள்ளது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close