பலூன் போல சுருங்கி விரியும் கற்பனைக்கு எட்டாத உடைகள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

பலூன் போல சுருங்கி விரியும் கற்பனைக்கு எட்டாத உடைகள் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
ஃபேஷன் டிசைனர்கள் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்த வடிவமைப்புகள் மூலம், ஃபேப்ரிக் மூலம், பிரிண்டுகள் மூலம் என ஒரு ஃபேப்ரிக்கை சுற்றியே இருக்கும். ஆனால் நார்வேஜியனைச் சேர்ந்த பிரட்ரிக் டஜிரண்ட்சென் என்னும் டிசைனர் யாருமே இதுவரை யோசிக்காத மற்றும் முயற்சி செய்யாத ஒரு வடிவமைப்பை செயல்படுத்தி யிருக்கிறார்.
பலூன் போல சுருங்கி விரியும் உடைகள்இதை ’பப்ளி கலெக்‌ஷன்ஸ்’ என்று அழைக்கின்றனர். லண்டனில் நடந்த பேஷன் ஷோவில் மிகப்பெரிய பலூன் பந்துகளுக்குள் மாடல்கள் அணிவகுத்து வந்தனர். என்ன இது விசித்திரமான உடையாக உள்ளதே. இதை எப்படி தெருக்களில் அணிந்து நடக்க முடியும் என பார்வையாளர்கள் விமர்சித்துக் கொண்டே பார்த்துள்ளனர். 
பின் அடுத்த நொடியிலேயே அந்த பலூன் காற்று வெளியேற்றப் பட்டு அதை அப்படியே ஆடையாக மாற்றிக் கொண்டனர். இவ்வளவு நேரம் காற்றில் மிதந்த பலூன் எப்படி ஆடையானது என அனைவருக்கும் ஆச்சரியம். இது தான் அவரின் சாதனை. அவரின் கற்பனை க்குக் கிடைத்த வெற்றி.
கற்பனைக்கு எட்டாத பலூன் உடைகள்இந்த ஆடையை முழுக்க முழுக்க ரப்பர் கொண்டு வடிவமைத் துள்ளார். இந்த ரப்பரை இலங்கையி லிருந்து வாங்கியிருப்பதுதான் கூடுதல் சிறப்பு. “இந்த ஆடைகள் தனித்தனி ஆடைகள் அல்ல. ஒரே ரப்பரில் செய்யப்பட்ட முழு ஆடை. இந்த ஆடை காற்றின் அழுத்தத்தால் இயங்கக் கூடிய வகையில் டிசைன் செய்யப் பட்டுள்ளது.
கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் ! 
இதை அணிந்திருப்போர் தலை கீழ் பலூனினுள் இருக்கும் காற்றை திறந்து விட்டால் சாதாரண உடையாக மாறி விடும் “ என டிசைனர் பிரட்ரிக் டஜிரண்ட்சென் கூறியுள்ளார். 

இவரின் இந்த கற்பனைத் திறனைக் கண்டு ஃபேஷன் உலகமே பாராட்டி வருகிறது. சமூக வலை தலங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன. இவர் இதற்கு முன் இளம் திறமையாளர் விருதையும் பெற்றுள்ளார்.


A post shared by TianweiZhang (@tianweizhang) on

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close