தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள் அதிரடி முடிவு !

0
தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், மாணவர்கள் தினசரி வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் சுற்றிக்கை வாயிலாக பள்ளிகள் அறிவுறுத்தி யுள்ளன.
தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள் அதிரடி முடிவு
சென்னையில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் பள்ளிகளையும் விட்டு வைக்க வில்லை. 

பல பள்ளிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்ட நிலையில், லாரிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரையும் பள்ளிகள் தினசரி வாங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளே மாணவர்கள் குடிப்பதற்காக பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே தண்ணீர் கேன்களை வைத்துள்ளனர். 

மேலும் மாணவர்கள் தினசரி வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்களு க்கு சுற்றிக்கை வாயிலாக பள்ளிகள் அறிவுறுத்தி யுள்ளன. 

தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் பரவலாக அனைவருக்கும் நீரீன் முக்கியத் துவத்தையும் சுற்றுச்சூழலை மாசற்றதாக 

எவ்வாறு காக்க வேண்டும் என்கிற விழிப்புணர் வையும் அனைவரது மத்தியிலும் உண்டாகி யுள்ளது.
அந்த வகையில் தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு மாணவர்கள் மத்தியிலும் அதிகளவு விழிப்புணர் வினை ஏற்படுத்தி யுள்ளதாக அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகவேல் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த தண்ணீர் பஞ்சம், தங்கள் பள்ளியில் தண்ணீரின் முக்கியத் துவத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலையினை ஏற்படுத்தி யுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)