அரசு வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

அரசு வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
அரசு வேலை வாய்ப்புகளில், பெண்களுக் கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்க லாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர் களுக்கு தனி பிரிவாக பிரித்து, 
அரசு வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தர விடக்கோரி சென்னை அமைந்தக் கரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘மூன்றாம் பாலினத்தவர் களுக்கு தனி நல வாரியம் துவங்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

அவர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர் களை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகக் கருதி இடஒதுக்கீடு வழங்க 2017-ல் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பெண்களுக் கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015-ல் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மூன்றாம் பாலினத்தவர் களுக்கு இடஒதுக்கீட்டுச் சலுகையை வழங்கும் வகையில், வேலை வாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது’’ என்று அறிக்கையில் கூறப் பட்டுள்ளது..
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 17-க்கு தள்ளி வைத்தது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close