சினிமா பாணியில் லஞ்சப் பணத்தை திருப்பிக் கொடுத்த அரசியல்வாதி !

0
அரசின் நலத்திட்ட உதவிகளுக் காக லஞ்சமாகப் பெற்ற ரூ.2.27 லட்சத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர், அந்தந்த மக்களிடையே திருப்பிக் கொடுத்திரு க்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. 
லஞ்சப் பணத்தை திருப்பிக் கொடுத்த அரசியல்வாதி



வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வு, மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் நடந்தேறி யுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரிலோசன் முகர்ஜி என்பவர், சத்ரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 141 கிராமத்தினருக்கு தலா ரூ.1,617 என திருப்பிக் கொடுத்துள்ளார்.
மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது - தெரியுமா ?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க கிராமத்தினரிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தைத்தான் தற்போது சிந்தாமல் சிதறாமல் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, அவர்கள் பணத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டேன். இதுபோல திரும்ப நடக்காது என்று உறுதி அளிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.



தங்களிடம் லஞ்சமாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சில நாட்களுக்கு முன்பு, கிராம மக்கள் முகர்ஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய நிலையில், 'திருடர்கள் வேண்டாம்' என்று லஞ்சம் பெறும் அரசியல்வாதி களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த எச்சரிக்கை யின் எதிரொலியாக இன்று லஞ்சப் பணம் மீண்டும் மக்களிடமே சென்றுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)