நாக்பூர் ஹோட்டலில் சாம்பார் வடையில் பல்லி ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

நாக்பூர் ஹோட்டலில் சாம்பார் வடையில் பல்லி !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
பிரபல ஹோட்டலில் சாம்பார் வடை ஆர்டர் செய்தவர் தட்டில் செத்த பல்லி ஒன்று மிதந்து கிடந்த சம்பவம் இணையத்தில் புகைப் படத்துடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாக்பூரில் உள்ள பிரபல ஹோட்டலான ஹல்திராம் ரெஸ்டாரண்டு க்கு நேற்று முன்தினம் யஷ் அக்னிகோத்ரி என்பவர் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். ஹோட்டலுக்கு சென்ற அவர்,சாம்பார் வடை ஆர்டர் செய்தார்.
நாக்பூர் ஹோட்டலில் சாம்பார் வடையில் பல்லி


சிறிது நேரம் கழித்து அவர், ஆர்டர் செய்த சாம்பார் வடை தட்டில் வைத்து அவருக்கு பரிமாறப்பட்டது. ஆசையுடன் எடுத்து சாப்பிட தொடங்கிய அவருக்கு காத்திருந்து மிகப் பெரிய அதிர்ச்சி. அவருக்கு கொண்டு வரப்பட்ட சாம்பார் வடையில் செத்த பல்லி ஒன்று மிதந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது குடும்பத்தாரை சாப்பிடுவதை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளார். 

பின்பு பல்லி செத்துக் கிடக்கும் சாம்பார் வடையை புகைப்படமும் எடுத்தார். பின்பு, அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் யஷ் அக்னிகோத்ரி நேற்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேற்றைய தினம் ஹல்திராம் ரெஸ்டாரண்டில் சோதனை நடத்தினர்.


அந்த சோதனையில் ஹோட்டலின் சமையலை யில் இருந்த ஜன்னல் மூடப்படாமல் இருப்பது கவனிக்கப் பட்டது. மேலும் அந்த ஜன்னல் வழியாக பல்லி சாம்பாரில் விழுந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்பு ஹல்திராம் ரெஸ்டாரண்டு க்கு எதிராக உணவுத்துறை ஆணையர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்லி விழுந்த சாம்பார் வடையை ருசி பார்த்த காரணத்தி னால் யஷ் அக்னிகோத்ரி தனது குடும்பத்துடன் தனியார் மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டார். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை அதிர்ஷ்டவச மாக அவர்களை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வழங்கி யுள்ளனர்.

சாம்பாரில் பல்லி மிதந்து கிடந்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close