11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய உருக்கமான கடிதம் !

0
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதாக கூறி தாய் மார்த்தா நாடு கடத்தப் பட்டார். 
11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்

இதை யடுத்து சிறுமியை அழைத்துச் செல்வதற்காக தாய்க்கு நிபந்தனை  யுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அலிக்ஜா தாயுடன் சொந்தநாடு திரும்பினார். 


இந்நிலையில் மீண்டும் பிரதமராக மோடி பொறுப் பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக் களை கூறி கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார் அலிக்ஜா. 

இந்த கடிதத்தில், 'நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். 

அதனை நான் இழந்து விட்டேன் என அந்த சிறுமி மிக உருக்கமாக பல தகவல்களை எழுதியுள்ளார். 


மேலும் தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும், இருவரின் விசா கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத் துறை மந்திரியாக பொறுப்பேற்ற ஜெய் சங்கருக்கும் கடிதம் எழுதி யுள்ளார். 


இந்த கடிதத்தினை அவரது தாய் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ளார். மழலை கையெழுத்தில் அந்த கடிதம் படிப்பவர் களை நெகிழச் செய்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)