காரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

காரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
கோவையில் ஓடும் காரிலிருந்து மனைவியை கணவன் கீழே தள்ளி விடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன. கோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. சென்னையைச் சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ். இருவருக்கும் திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகின்றன. 
காரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர்


இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளுக்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக, ஆர்த்தி அவரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில், நீண்ட சமரச பேச்சு வார்த்தைகளு க்கு பின்னர் தனது 2 குழந்தைகளை யும் அழைத்துக் கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் புதிய வாழ்க்கை தொடங்கு வதற்காக சென்றுள்ளார்.

கடந்த மே மாதம், கோவையி லிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச் சென்றுள்ளார் அருண். அப்போது காரில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஆர்த்தியை ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார் அருண். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கீழே தள்ளி விடப்பட்ட ஆர்த்தியின் கை மற்றும் கால்களில் ரத்தம் வழிந்துள்ளது. 

உடனே அவர் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட் டுள்ளனர். இதுக் குறித்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி கூறியிருப்ப தாவது, என் கணவர் ஏற்கனவே என்னை பல முறை கொடுமை படுத்தியுள்ளார். 


கடந்த 2008 -ல் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போதிருந்தே எங்களுக் குள் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனினும், 6 வருடங்களாக பொறுமையாக இருந்தேன், இந்நிலையில் கடந்த 2014ல் 2 குழந்தைகளை யும் அழைத்துக் கொண்டு, மும்பையில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன்.

மீண்டும் என் குழந்தைகளுக் காக அவருடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து அவரை நம்பி சென்றேன். ஆனால் அவர், இந்த முறை என்னை கொலை செய்யவே துணிந்து விட்டார். நான் காரில் இருந்து தள்ளி விடப்படும் போது காரில் என் மாமனார் மாமியாரும் உடன் இருந்தனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close