ரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம் கண்டறிவது எப்படி?

0
கோடை வெயிலை யொட்டி மாம்பழங்களின் விற்பனை தொடங்க ஆரம்பித்து விட்டது. அதன் விற்பனை மற்றும் தேவைக்காக, ஒரு பழம் இயற்கையான முறையில் பழுக்கக்கூட நேரம் அளிப்பதில்லை. 
இயற்கையாகப் பழுக்க எத்தலின் இரசாயனம்
முன்பெல்லாம் விவசாயிகள் மரத்திலேயே பழக்கும் வரை விட்டுப் பறிப்பார்கள் அல்லது காயாக இருக்கும் போதே அதைப் பறித்துத் தனி அறையில் பழுக்க வைப்பார்கள். 

மாம்பழம் இயற்கையாகப் பழுக்க எத்தலின் என்னும் இரசாயனம் சுரக்கும். அதன் பிறகே அது பழுக்க ஆரம்பிக்கும். பழங்களும் விற்பனையின் போது தயார் நிலையில் இருக்கும். 

ஆனால் இன்றைய அவசரக் காலகட்டம் பழங்களையும் விட்டு வைக்க வில்லை. மாம்பழங் களை எளிதில் பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தி இரண்டு நாட்களிலேயே பழுக்க வைக்கின்றனர். 

இதனால் அவை கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் மக்களை ஈர்க்கிறது. மக்களும் ஏமாந்து வாங்கி விடுகின்றனர். 

இயற்கையாக பழுக்கப்பட்ட பழம் எவ்வாறு வேறுபடுகிறது என நந்திதா ஷஹா என்னும் ஊட்டச் சத்து நிபுணர் ஹெல்த் சைன்ஸ் பத்திரிகைக்கு அளித்த குறிப்புகளி லிருந்து உங்களுக்காக சில.
”செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும் போது அவை ஹார்மோன் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. 

அதன் விளைவாக ஹைப்போ தைராய்டு, நீரிழிவு நோய், கருப்பைப் பிரச்னை, புற்று நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. 

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கு பால் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

அப்படிக் கொடுத்தால் குழந்தையின் உடல் நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது” என எச்சரிக்கிறார். மாம்பழம் வாங்கியதும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் போடுங்கள். 

பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும். மேலேயே மிதந்தால் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழம்.

வண்ணம் : 
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங் களின் தோல்களில் ஆங்காங்கே பச்சை நிறம் தென்படும். இயற்கையான பழத்தில் இப்படி பச்சை நிறம் இருக்காது. 

அதே சமயம் சீரான மஞ்சள் நிறமும் இருக்காது. அதே போல் அதன் மஞ்சள் நிறம் வெளிரென இருக்கும். இப்படி இருந்தால் அவை செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகும்.

மாம்பழம் சதையின் தோற்றம் மற்றும் நிறம் : 

நீங்கள் பழத்தை நறுக்கும் போதே அதன் வாசனை தெரியும். அதே சமயம் அதன் சதைப் பகுதி பளீர் சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். 

செயற்கை மாம்பழத்தில் வெளிர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

அதே போல் இயற்கையாகப் பழுத்த பழங்கள் வெளிப் புறத்தில் பாதிக்கப்பட்ட, அழுகியது போன்ற தோற்றத்தில் இருக்கும். 
செயற்கை முறையில் பழுக்க வைக்க
ஆனால் அதன் சதைப்பகுதி அப்படி இருக்காது. சுவை நிறைந்ததாக இருக்கும். செயற்கை மாம்பழம் பழுத்ததாக இருந்தாலும் அதன் சதைப் பகுதி கெட்டியாக இருக்கும். 

இயற்கை பழம் அப்படி இல்லாமல் கொழகொழவென இருக்கும். சதை தோலில் ஒட்டாமல் இருக்கும். 

சுவை : 

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும் போது கொஞ்சம் வாயில் அல்லது உதட்டில் எரிச்சல் ஏற்படும். 

சிலர் அதனால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளையும் எதிர்கொண்டிருப்பார்கள்.
மாம்பழச்சாறு : 

மாம்பழத்தை நறுக்கும் போதே அதன் சாறு ஒழுகும். செயற்கை பழத்தில் சாறு மிகக் குறைவாக வரும் அல்லது வரவே வராது. 

காரணம் எத்தலின் இரசாயனம் தான் அந்த சாறை உருவாக்கும். செயற்கை முறையில் அது சாத்தியமில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)