அதிமுகவில் கடும் மோதல்... மோடியுடன் கவர்னர் இன்று சந்திப்பு !

0
அதிமுகவுக்குள் கடும் மோதல் எழுந்துள்ள பரபரப்பான அரசியல் சூழலில் திடீரென டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 
அதிமுகவில் கடும் மோதல்... மோடியுடன் கவர்னர் இன்று சந்திப்பு !
இதை யடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ அபார வெற்றி பெற்றுள்ளது. 

இதை யடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

பல்வேறு மாநிலங்களில் அதிகப் படியான இடங்களை பிடித்த பாஜ தமிழகத்தில் மட்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. 

இதனால் கூட்டணி கட்சியான அதிமுகவின் மீது பாஜ தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜ அலுவலகத்தின் மூலம் தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிக்கையாக தயார் செய்து கடந்த வாரம் அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பப் பட்டுள்ளது. 

அதில், பாஜ தரப்பில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் கூட்டணி கட்சியான அதிமுக சரியான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வில்லை. 
அதனால் தான் மக்களைவை தேர்தலில் தமிழகத்தில் இத்தகைய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. 

இருப்பினும் அதற்கான காரணத்தை கண்டறிந்து கட்சியை மேலும் வலுப்படுத்து வதற்கான அனைத்து முயற்சிகளும் மாநில பாஜ தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில சட்டத்துறை அமைச்சருமான சிவி. சண்முகம் 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார். 

அதில், தமிழக மக்களுக்கு பா.ஜ மீது ஏற்பட்ட அதிருப்தி தான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது அ.தி.மு.கவின் வெற்றியை பாதித்தது. 

அதுவே எங்களது அணி தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்து விட்டது என்ற பகிரங்க குற்றச் சாட்டை வைத்தார். இந்த விவகாரம் பாஜ தலைமைக்கு உடனடியாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 
இதனால் தற்போது அதிமுக மீது பாஜ தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதே போல் அதிமுக விலும் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில் அக்கட்சியின் எம்எல்ஏ க்கள் ராஜன் செல்லப்பா, ராமச்சந்திரன் இருவரும் திடீர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர். 

அதில், அதிமுகவுக்கு சுயநலமற்ற, வலிமையான ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மூத்த தலைவர்களில் பெரும் பாலானவர்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இதில் அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கக் கூடாது என்று எழுந்த கோரிக்கை வலுத்ததால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது 

என்பதற்காக கட்சியினர் யாரும் பேட்டி மற்றும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. 

இதைத் தொடர்ந்து தற்போது அனைவரது கவனமும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மீது திரும்பி இருக்கிறது. அதில், அதிமுகவில் மொத்தம் 55 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். 

நாளை இவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கட்சி தலைமைக் கழக நிர்வாகிகள் 72 பேர், செய்தித் தொடர் பாளர்கள் 16 பேர், 
எம்.எல்.ஏ.க்கள் 121 ஆகியோர் உட்பட மொத்தத்தில் சுமார் 300 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 

மேலும் அதிமுக நிர்வாகிகளில் சிலர் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்று விட்ட நிலையில் அவர்கள் வகித்து வந்த இடங்களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். 

எனவே நாளை கூடும் அ.தி.மு.க. கூட்டம் முழுமையான நிர்வாகிகள் கொண்டதாக இருக்கும் என்பதால் கடுமையான காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. 

அதில் குறிப்பாக, பா.ஜனதா கூட்டணி, தேர்தல் தோல்வி ஆகிய வற்றை பற்றி தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப் பட்டாலும் இரட்டை தலைமை தொடர்பான சர்ச்சை தான் அதிக விவாதத்தை ஏற்படுத்தும். 

அதனால் இந்த முறையை நீக்கி விட்டு மீண்டும் அதிமுக பொதுச் செயலாளராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என்று தெரிகிறது. 

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஓரம் கட்டப்படலாம் என தெரிய வருகிறது. 

அதற்கான அனைத்து வேலைகளை யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவதாக அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகி யுள்ளது. 
இதில் ஏற்கனவே தனது ஆதரவாளரான வைத்திய லிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடக்காமல் போனதற்கு 

முக்கிய காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான் என அவர் மீது எடப்பாடி கடும் கோபத்தில் இருந்து வருகிறார். 

இதில் ஒற்றை பதவி எனக்கூறி மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமி தான் நியமனம் செய்யப் படுவார் என தெரிகிறது. 

இதனால் நாளை நடக்கும் கூட்டத்தின் முடிவில் அதிமுக என்ற கட்சியின் முழு நிலவரம் தெரிந்து விடும். 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். 

சாணக்கியா புரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் சென்ற அவர் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் புதிய உள்துறை அமைச்சராக பதவியேற்ற அமித்ஷாவை பிற்பகல் 2.30 மணிக்கு சந்தித்து பேசியுள்ளார். 

சுமார் 20 நிமிடங்களு க்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது தமிழகம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டதாக தெரிகிறது. 
குறிப்பாக அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இடையே நடந்து வரும் பனிப்போர், 

தமிழகத்தில் பாஜ தோல்விக் கான காரணம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்வது ஆகியவை குறித்து பேசப் பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

இதை யடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உள்துறை அமைச்சரிடம் நடத்தப்பட்ட அனைத்து ஆலோசனை களையும் அறிக்கையாக அவரிடம் கொடுப்பார் என தெரிய வந்துள்ளது. 

மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் கவர்னர் இன்று சந்திக்கிறார். 
இந்த சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக - பாஜ கூட்டணி நீடிக்குமா என்பதும் ஆட்சிக்கு ஆபத்து வருமா என்பதும் அடுத்த சில தினங்களில் தெரிய வரும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

துணை முதல்வர் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக மோடி, அமித்ஷா இருப்பதாக முதல்வர் எடப்பாடி தரப்பு நம்புகிறது. 

இதனால், மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக தொடர்பு கொள்ள வழி தெரியாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவித்து வருகிறது. 

தமிழக அமைச்சர்கள் தங்க மணிக்கும், வேலு மணிக்கும் பாஜ மூத்த தலைவர்களுள் ஒருவரான ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் 

நட்பு உள்ளது. ஒடிசாவை சேர்ந்த தனியார் நிறுவன அதிபர் ஒருவர் மூலம் இந்த நட்பு ஏற்பட்டது. 

தமிழக கவர்னர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி நேற்று மாலை திடீரென டெல்லிக்கு விரைந்தனர். 
டெல்லி சென்றதும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை உடனடியாக சந்தித்தனர். அப்போது அதிமுக கோஷ்டிபூசல் பிரச்னை குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். 

தங்கள் விளக்கத்தை பிரதமரிடம் தெரிவிக்கும்படி பியூஷ் கோயலிடம் அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)