PF பணத்தை உடன் எடுக்க இந்த காரணம் போதும் !

0
இந்தியாவில் மாதச் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களு க்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இதுவரை படிவம் மூலமாக விண்ணப்பித்துப் பெற்று வந்தோம்.
PF பணத்தை உடன் எடுக்க இந்த காரணம் போதும் !
இதுவே இப்போது ஆன்லைன் மூலம் எழிதாக கிடைக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. பி.எஃப் பணத்தை எடுக்க வேண்டு மெனில், வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. 

பி.எஃப் பணத்தை எடுக்கும் போது படிவம் எண் 19, 10சி ஆகிய வற்றைப் பூர்த்தி செய்து வேலை செய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். 

அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேலும் நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்து க்கு அனுப்பப்படும். 

ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்ப த்தைப் பூர்த்தி செய்து அதனுடன் வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகிய வற்றை இணைக்க வேண்டும். 
இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பிலிடுவது இது வரையில் நடைமுறை யாக இருந்து வந்தது. 

மேலும் ஒரு நிறுவனத்தில் இருந்து ஏதோ ஒரு பிரச்னை காரணமாக வேலையி லிருந்து விலகியவர் களுக்கு, பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது சிக்கலாகவும் இருந்தது. 

ஆனால் இப்போது இந்த அனைத்து க்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கலாம். 

10 வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி இருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போதும் எடுக்கலாம். 

10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும் போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். ஆனால் இதற்கு வட்டி கிடையாது. 

மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது 1.9.2014-க்கு பின் அறிவிக்கப் பட்டது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிக பட்சமாக பென்ஷனுக் காக ரூ.1,249 பிடிக்கப்படும். 
இது அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்து விட்டால் அவரது வாரிசு தாரருக்கு கிடைக்கும். 

இதற்கு குறைந்த பட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பிஎஃப் தொகையை இடையில் எடுக்க முடியும். 

பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்து க்கு, மருத்துவச் சிகிச்சை போன்ற வற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை//www.epfindia.com/ இணைய தளத்தில் பார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)