தாறுமாறாக கார் ஓட்டிய முதியவர் சிறையில் அடைப்பு ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

தாறுமாறாக கார் ஓட்டிய முதியவர் சிறையில் அடைப்பு !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில், மப்பேடு சந்திப்பு அருகே கடந்த 8ம் தேதி மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார், சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த இரும்பு தடுப்புகளில் வேகமாக மோதி பின்னர் முன்னால் சென்ற 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பியது. 


இதில் அகரம் தென் பிரதான சாலை பதுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கிளரசன் கேன்வாஸ் பிரபு (18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விக்ரம் (18), மப்பேடு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43) மற்றும் அவரது மனைவி சாந்தி (40) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற காரை பறிமுதல் செய்தனர். 

விபத்து ஏற்படுத்தி தலைமறை வாக இருந்த அகரம் தென் பிரதானசாலை, பதுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வரதன் (54) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வரதனை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close