பீகார் மருத்துவமனையில் மூளை காய்ச்சலுக்கு 73 பேர் பலி !

0
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 
பீகார் மருத்துவமனையில் மூளை காய்ச்சலுக்கு 73 பேர் பலி



கடந்த மூன்று தினங்களு க்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக் காய்ச்சல் பரவி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக் காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக் காய்ச்சலும் பரவியுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி இந்நோய்களி னால் பலியானோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப் பட்டவர்கள் அதிகமாக அனுமதிக்கப் பட்டுள்ள முசாபர்பூர் அரசு மருத்துவ மனைக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் இன்று வந்தார். 

நோயாளி களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர் களுடன் ஆய்வு செய்தார். மேலும் அங்கு தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர் களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)