கடும் வெப்பம் காரணமாக ரயிலில் பயணித்த 4 பேர் மரணம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

கடும் வெப்பம் காரணமாக ரயிலில் பயணித்த 4 பேர் மரணம் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
உத்தர பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணமடைந் துள்ளனர் என தகவல் வெளியாகி யுள்ளது. பச்சையா (வயது 80), பால கிருஷ்ணன் (வயது 67), தனலட்சுமி (வயது 74), சூப்பாரய்யா (வயது 71) ஆகியோர் இறந்தவர்கள் என தகவல் வெளியாகி யுள்ளது. 
 கடும் வெப்பம் காரணமாக ரயிலில் பயணித்த 4 பேர் மரணம்


கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வயதான முதியோர்கள் குழுவாக கோவை யிலிருந்து காசிக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று டெல்லியில் மட்டும் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மேலும் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை நீடித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சுமார் 68 பேர் கொண்ட குழு காசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்களது ஆன்மிக பயணத்தை நிறைவு செய்தனர். இதை யடுத்து நேற்று மாலை கேரளா எக்ஸ்பிரஸ் மூலம் கோவைக்கு திரும்பி யுள்ளனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக வும், வெயிலின் காரணமா கவும் 4 பேர் மயங்கி விழுந்து இறந்ததாக தகவல் வெளியாகி யுள்ளது. இறந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 


ஆக்ராவில் இருந்து வந்த போது உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்சி அருகே கடும் வெப்பம் காரணமாக அனல் காற்று வீசியது. இதன் காரணமாக இவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடுமையான உடல் நலக்குறைவு காரணமாக அவர்கள் ஜான்சியில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த தாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இவர்கள் கோவை மற்றும் நீலகிரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close