13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் !

Subscribe Via Email

ஆந்திராவில் 13 வயது சிறுவனை 23 வயது பெண் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் தாலுகா அருகே உள்ள உப்பரஹால் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
13 வயது சிறுவனை  திருமணம் செய்த 23 வயது பெண்இந்த கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள் (23) என்பவர் இந்த சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். 
அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது. இதன் காரணமாக மைனரான சிறுவனுக்கும், மேஜரான அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களு க்குத் தெரிய வந்தது.பின்னர் ஒரு வழியாக பெற்றோர்கள் சம்மதித்து சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் சமூகவலை தளங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறை வாகி விட்டனர்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close