கடலுக்குள் பூகம்பம் ஏற்பட்டால் என்னென்ன நடக்கும்?





கடலுக்குள் பூகம்பம் ஏற்பட்டால் என்னென்ன நடக்கும்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
நிலப் பகுதியில் பூகம்பம் மற்றும் நிலநடுக்கம் ஏற்படுவது போல் அவ்வப்போது கடலுக் குள்ளும் பூகம்பம் ஏற்படுகிறது கடலுக்குள் இருக்கும் எரிமலைகளும் வெடிக்கின்றன. இவை எல்லாம் கடலின் அடிமட்டத்தில் ஏற்படுகின்றன.
கடலுக்குள் பூகம்பம் ஏற்பட்டால் என்னென்ன நடக்கும்?
கடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இந்த தலைகீழ் கொந்தளிப்பினால் கடலில் அலைகள் ஏற்படுகின்றன. கடலுக்குள் ஏற்படும் பூகம்பத்தால் இந்த அலைகள் உருவாகின்றன. 

இதன் விளைவாக கடல் மேற்பரப்பில் கடல் அலைகள் பொங்கி எழுகின்றன. பொங்கி எழும் இந்த அலைகள் முற்றிலும் வேறுபட்டது. 

இதை 'சுனாமி' என்ற அழைக்கிறார்கள். 'சுனாமி' என்ற இந்த ராட்சத அலை 100 அடி உயரம் எழும். இந்த விஸ்வரூப அலையின் வேகம் ஒரு ஜெட் விமானத்தின் வேகத்தை விட அதிகமானது. 

மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் கடலில் பூகம்பம் உருவான இடத்தி லிருந்து கரையை நோக்கி வரும். 1958 -ம் ஆண்டு ஜூலை மாதம் அலாஸ்காவில் ஒரு 'சுனாமி அலை' எழுந்து வந்தது. 

இதன் உயரம் 1,720 அடி. இது தான் உலகில் மிக உயரமான அலையாம். 1946ம் ஆண்டில் அலுாஷன் தீவுக்கு அருகில் கடலின் அடிமட்டத்தில் ஒரு பெரிய நிலநடுக்கம் தோன்றியது.

இந்த நடுக்கத்தின் விளைவாக தோன்றிய ராட்சத கடல் அலைகள் 5 மணி நேரத்திற் குள் 3200 கி.மீ. தாண்டியுள்ள ஹவாய் தீவு வரை சென்று அங்குள்ள பாலங்களையும் தகர்த்து எறிந்து விட்டன. 

டச்சுத் தீவான கிரகாடோவிற்கு அருகில் கடலில் 1883ல் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக கடலின் மேற்பரப்பில் 100 அடி உயரத்திற்கு கடல் அலைகள் பொங்கி எழுந்தன.

இவைகளினால் நுாற்றுக் கணக்கான கிராமங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டன.  

இவ்வலைகள் மணிக்கு 1,120 கி.மீ. வேகத்தில் வீசி ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளின் கரைகளையும் தொட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

சரி இப்படி கடலுக்குள் நடக்கும் பூகம்பத்தை முன் கூட்டியே அறிய முடியுமா? என்றால் எத்தனையோ விஞ்ஞான முன்னேற்றம் உள்ள ஜப்பான் நாட்டில் கூட தெரிந்து கொள்ள முடிய வில்லை.
விஞ்ஞானத்தின் மூலம் பூகம்பம் ஏற்படும் பகுதிகள் என்று சிலவற்றை மட்டும் கணித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இடத்தில் பூகம்பம் எப்போது வரும் என்று சொல்வது கடினம்.

ஆனால், சில பறவைகளுக்கும், விலங்கு களுக்கும் பூகம்பம் ஏற்படுவதற்க முன் இயற்கைச் சூழலில் எற்படும் மெல்லிய மாற்றங்களை உணர முடியும் என்கிறார்கள்.

பூமிக்குள் பூகம்பம் ஏற்படும் போது கந்தக வாசனை வீசுமாம். கடல்நீர் கலங்கலாகத் தெரியுமாம். இவற்றை எல்லாம் உணர்ந்து சிலிர்த்துக் கொண்டு பறவைகள் சிறப்புச் சத்தங்களை எழுப்பும்.

அந்த இடத்தை காலி செய்து பாதுகாப்பான வேறு இடத்துக்கு நகரும். இப்படி கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம் தான் சமீபத்தில் தமிழக கரையோரங் களை பதம் பார்த்தது.
Tags: