அமெரிக்காவை ஏமாற்றி சோதனையை வெற்றிகரமாக முடித்தது எப்படி? - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

அமெரிக்காவை ஏமாற்றி சோதனையை வெற்றிகரமாக முடித்தது எப்படி?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
கடந்த 1998 ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகர மாக நடத்தியது. அன்றைய தினம் 3 அணு குண்டுகள் அடுத்தடுத்து சோதித்துப் பார்க்கப் பட்டன. பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. 
45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டு


சக்தி – I. II. III என்ற வரிசையில் மூன்று குண்டுகளை இந்தியா பரிசோதனை செய்தது. அமெரிக்க உளவுத் துறையின் கண்களில் மண்ணை தூவி இச்சோதனையை இந்தியா மேற்கொண்டது. இதனை யடுத்து அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடை விதித்தன. 

உலக நாடுகளின் நெருக்கடிக்கு மத்தியில் இரண்டு நாட்களுக்கு பின்னர் 1998 மே 13-ம் தேதியும் இந்தியா சக்தி IV மற்றும் சக்தி V என்ற இரு குண்டுகளை வெடிக்கச் செய்தது. நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் சோதனைகளை நிகழ்த்தி வெற்றியை தனதாக்கியது அப்போதைய வாஜ்பாய் அரசு.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடைபெற்ற அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிடப் பட்டது. நரசிம்மராவ் தலைமை யிலான அரசு தயாரான போது அமெரிக்க செயற்கை கோள்களின் கழுகுக் கண்களில் பட்டு விட்டது. இதனால், அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக் காட்டியது. இந்தியா அணு ஆயுத வல்லமை நாடு என்றும் அறிவிக்கப் பட்டது.
அமெரிக்காவை ஏமாற்றி சோதனை


அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) நடவடிக்கையை மேற்கொண்டது. சுழன்று கொண்டிரு க்கும் செயற்கைக் கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியி லிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளி யில் சோதனை முடிக்கப் பட்டது. விஞ்ஞானி களுக்கு ராணுவ உடை வழங்கப் பட்டிருந்தது. 

மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக அப்துல் கலாம் இருந்த போது இந்த சோதனை நடைபெற்றது. அமெரிக்கா வின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசிய பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்து விட்டதாக தெரிவித்தது. 

இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், தொழில்நுட்ப மேம்பாட்டையும் பறைசாற்றும் வகையில், கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பொக்ரான் அணுகுண்டு சோதனை தினமான மே 11 ம் தேதி, தேசியத் தொழில்நுட்ப தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause