கடந்த தேர்தலில் மோடி அலை.. இம்முறை மோடி சுனாமி.. தேவேந்திர பட்னா !

0
மக்களவை தேர்தலில் அசூர வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் தனிப்பெரும் பான்மையுடன் பாஜக ஆட்சி யமைக்க உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடந்த முறையாவது மோடி அலை தான். இம்முறை வந்ததோ மோடி சுனாமி என்றார்.
கடந்த தேர்தலில் மோடி அலை.. இம்முறை மோடி சுனாமி.. தேவேந்திர பட்னா !


17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகக்ப்பட்டு வருகின்றன. இதில் 365 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்று பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

கடந்த முறை போலவே இம்முறையும் ஆட்சியமைக்க தேவையான பெரும் பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி மற்றும் முன்னிலையை பெற்று வருகிறது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் சுமார் 41 தொகுதிகளில் பாஜக - சிவ சேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் மராட்டிய த்தை ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ், மக்களவை தேர்தல் வெற்றி குறித்து செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் 2014-ல் இருந்த மோடி அலை இந்த தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது.


பாஜக, சிவ சேனா என நாங்கள் இருவருமே தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளோம். அதனால் தான் மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிரா வில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நினைப்பதாக குறிப்பிட் டுள்ளார். இது தங்களின் பொறுப்பினை மேலும் அதிகரித் துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)