நேட்டோ படை தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி !

0
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீப காலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கி யுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப் படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தர விட்டுள்ளார்.
நேட்டோ படை தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி


இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையி லான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கர வாதிகளை வேட்டை யாடும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள அர்கன்டாப் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 9 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். இதேபோல், கஸ்னி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அன்டார் மாவட்டத்தில் மேலும் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)