இந்தியாவிலேயே அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்ற ராகுல் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

இந்தியாவிலேயே அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்ற ராகுல் !

Subscribe Via Email

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாச த்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவி லேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்ற ராகுல்


நாடு முழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் பாஜக பெருவாரியான தொகுதிகளை வசமாக்கி யுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி யுள்ளது. நாடு முழுவதும் பாஜக 340 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அமேதியில் பின்னடைவு

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்தார். ஆனால் முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.

ரேபரேலியில் முன்னிலை

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி யடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் காங்கிரஸ் கோட்டையான அமேதியில் தோல்வி யடைந்தார் ராகுல். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்..

வயநாட்டில் வெற்றி


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வயநாட்டில் ராகுல்காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 12,76,945 வாக்குகள் பெற்ற ராகுல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரசுக்கு பின்னடைவு

நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதரக்கட்சிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close