மகனை விஷ ஊசி போட்டு கொன்ற பெற்றோர் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

மகனை விஷ ஊசி போட்டு கொன்ற பெற்றோர் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
மகாராஷ்டிரா வின் கோல்ஹாபூரில் வசித்து வரும் தம்பதி அருண் சக்காராம் வால்வேக்கர் (வயது 55), ரேகா (வயது 40). இவர்களின் மகன் அனிகேத் என்ற அபிஜீத் அருண் வால்வேக்கர் (வயது 24). பெற்றோரிடம் அருண் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மகனை கொன்ற பெற்றோர்


இந்த நிலையில், கிணறு ஒன்றில் இருந்து கடந்த 7 -ந்தேதி அவரது பிணம் மீட்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன. தங்களின் மகன் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததில் ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த 4ந்தேதி விஷ ஊசி போட்டு கழுத்தை நெரித்து கொன்று அவனை கிணற்றில் வீசியுள்ளனர். 

இந்த கொடூர சம்பவத்திற்கு 3 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் சுராஜ் ராமசந்திரா (வயது 24), அவினாஷ் என்ற பப்லு அனில் ஜக்தப் (வயது 22) மற்றும் அபிஜீத் டிங்கர் சூரியவன்ஷி (வயது 26) ஆவர். இவர்கள் 3 பேரும் வடகாவன் பகுதியில் வசிப்பவர்கள். 

இந்த கொலை சம்பவம் வடகாவன் பகுதியில் உள்ள அம்பப்-மன்படாகே சாலையில் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause