இலங்கையில் மசூதி கண்ணாடிகள் மற்றும் கடைகள் உடைப்பு - வெளியான வீடியோ ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

இலங்கையில் மசூதி கண்ணாடிகள் மற்றும் கடைகள் உடைப்பு - வெளியான வீடியோ !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர் களுக்கு சொந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்த தாக தெரிய வந்துள்ளது.


இது தொடர்பான செய்தியை Reuters பத்திரிக்கை வெளியிட்டுள்ள தாக @SriLankaTweet டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் கினியமா, குயிலிபிட்டிய, ஹெட்டிபோல போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமியர் களுக்கு சொந்தமான கடைகள் மீது ஒரு குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப் பட்டதாக தெரிய வந்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மசூதிகள், கடைகளின் புகைப் படங்கள் தற்போது வெளியாகி யுள்ளது.

30 -க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள முஸ்லிம் வீடுகளை சூறையாடி தீ வைத்துக் கொளுத்திய சிங்கள வெறியர்கள்! இலங்கை காவல்துறை மற்றும் இராணுவம் முன்னிலை யிலேயே நடைபெறும் அட்டூழியங்கள்!

கேட்பாரற்று நிற்கும் இலங்கை முஸ்லிம்கள்! சிங்கள வெறியர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, முஸ்லிம் களை கருவறுப்பதற்கு ஏதுவாக இன்று இரவு முதல் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு!


வெளியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் சிங்கள வெறியர் களுக்கு முழு சுதந்திரம்! அதே நேரத்தில், அப்பாவி முஸ்லிம்களை பார்த்து பார்த்து கைது செய்து காவல்துறை வெறியாட்டம்!

பொது பல சேனா சிங்கள வெறியர்கள் உள்ளிட்ட இனவாதிகள் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம் போட்டு செயல்படும் இவ்வேளையில் இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டிய இலங்கை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி, முஸ்லிம்களை கருவறுக்க துணை போகும் கொடுமை அரங்கேறி வருகின்றது.

முஸ்லிம்களின் இன அழிப்பு வெளியே தெரியாத வகையில், ஃபேஸ் புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் குண்டு வெடித்த அடுத்த நொடியே பாதிக்கப்பட்ட கிறித்தவ சகோதரர்களின் உயிர்களை காக்க தங்களது உயிரையும் துச்சமாக மதித்து இரத்தம் கொடுத்து உயிர் காத்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள்.

நிலமை இப்படி இருக்க சிங்கள இனவெறியர்கள் - அஹிம்சை பேசும் புத்த மதத்தினர் முஸ்லிம்களை கருவறுக்க துடியாய் துடிக்கின்றனர். இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் 20 பேர் உட்பட அப்பாவி சகோதரர்கள் பலரை கைது செய்துள்ளது இலங்கை காவல்துறை.
பள்ளி வாசல்களில் புகுந்து தீவைத்துக் கொளுத்திய இந்த வெறியர்கள் திருக்குர்ஆனையும் தீ வைத்துக் கொளுத்தி தங்கள் அஹிம்சாவெறியை தீர்த்துள்ளனர். முஸ்லிம் சமுதாயம் இப்படி திட்டமிட்டு கருவறுக்கப் படும் நிலையில் இந்த செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டி முஸ்லிம் களுக்கு நீதி கேட்க ஒரு மீடியாக்களும் இல்லை; குரல் எழுப்ப உலக நாடுகள் இல்லை. 
முஸ்லிம்களுக்கான ஒரே பாதுகாவல் நம்மைப் படைத்த இறைவன் மட்டுமே! அவனிடமே கையேந்துவோம். முஸ்லிம்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி வரும் இந்த சிங்கள வெறியர்களை இறைவா நீ நாசமாக்கு! இவர்கள் மீது உன் பிடியை இருக்குவாயாக!

துன்பத்தில் உளலும் இலங்கை முஸ்லிம் களுக்கு நீயே பாதுகாப்பளிப் பாயாக! அவர்களின் துன்பங்களைப் போக்குவாயாக! என்று அனைவரும் பிரார்த்திப்போம்!

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause