திருநாவுக்கரசின் காம களியாட்டம் - அதிகாரிகளிடம் கூறியது என்ன? - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

திருநாவுக்கரசின் காம களியாட்டம் - அதிகாரிகளிடம் கூறியது என்ன?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கி றாங்கன்னு தான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே" என்று திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் அன்று கொதித்து போய் சொன்னார்கள். அவர்களிடம் தான் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநாவுக்கரசின் காம களியாட்டம்


7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப் பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.
இந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளி யான திருநாவுக்கரசு தான் என்பதால், கோவை சின்னியம் பாளையத்தில் தான் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமை யிலான குழு அங்கு நேற்று மதியத்தி லிருந்து சோதனை நடத்தியது.

இந்நிலையில், இன்று திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவது தான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை. இந்த பண்ணை வீடு ஆனை மலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம் பாளையம் பகுதியில் இருக்கிறது.

இது திருநாவுக்கரசு க்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்பட வில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத் தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவு தான் வீடு திரும்பு வார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன் தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் சொல்லும் போது, "சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்கும். ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங் கன்னு தான் நெனச்சோம். இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணு வாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல.. காலங்காத்தாலே 7 மணிக்கே திருநாவுக்கரசு இங்க சுத்திட்டு இருப்பான்.. 
அதிகாரிகளிடம் கூறியது என்ன?


இன அவன் இந்த பக்கம் இனி வரட்டும்... நாங்க பார்த்துக்கறோம்" என்று ஏற்கனவே ஆவேசமாக சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் தான் சிபிஐ அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சப்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா' என, அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.
அதற்கு மக்கள், "கூலி வேலைக்கு போய்ட்டு, இரவில் தான் வீடு திரும்புவோம். யார் வந்தார்கள் என்பதை கண்காணிக்க வில்லை. பெண்கள் சப்தம் கேட்ட தில்லை. ஆனா கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக் கிறோம்" என்றனர்.

இனி திருநாவுக்கரசு வின் நடவடிக்கைகள் பற்றி மொத்த விவரத்தையும் அதிகாரிகளிடம் மக்கள் கொட்டி தீர்ப்பார்கள் என்றே தெரிகிறது. நேற்றும், இன்றும் திருநாவுக்கரசை சுற்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்தை நீட்டித்துள்ள தால், அதிர்ச்சி தகவல்கள் பல வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause