பிறப்புறுப்பில் பைக் ஹேண்டில்பாரை செலுத்தி கொடூரம் - கணவர் கைது ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

பிறப்புறுப்பில் பைக் ஹேண்டில்பாரை செலுத்தி கொடூரம் - கணவர் கைது !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
மத்திய பிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா(35). 15 ஆண்டுகளு க்கு முன் திருமணமாகி, இவருக்கு தற்போது 6 குழந்தைகள் உள்ளனர். ராமா கடந்த 2 ஆண்டுக ளாக தனது மனைவியை சித்தரவதை செய்து வந்துள்ளார். திருமணமாகி 6 குழந்தைகள் ஆன போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என கூட பாராமல், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமை செய்துள்ளார்.
பிறப்புறுப்பில் பைக் ஹேண்டில்பாரை செலுத்தி கொடூரம்
இதற்கிடையில் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த வாக்கு வாதத்தில், கோபத்தின் உச்சியில் இருந்த ராமா, அப்பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த ஹேண்டில்பாரை செருகி சித்தரவதை செய்துள்ளார். ஆனால் இந்த கொடுமை பற்றி அப்பெண் யாரிடமும் சொல்ல வில்லை. 


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அப்பெண் பாதிக்கப் பட்டுள்ளார். இதை யடுத்து மருத்துவ மனைக்கு சென்றபோது, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறி யுள்ளனர். 

வறுமையில் வாடி வரும் அப்பெண், போதிய பணம் இல்லாததால் வீடு திரும்பினார். அதன்பின் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித் துள்ளார். பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் சற்று நிலை தடுமாறினர். வலியோடு கதறி அழுதபடியே புகார் அளித்த அந்த பெண்ணை, போலீசார் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

அந்த பெண்ணுக்கு போலீசார் உதவியோடு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், 6 இஞ்ச் அளவுள்ள பைக்கின் உடைந்த ஹேண்டில்பார் அகற்றப் பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார். இதனை யடுத்து ராமா கைது செய்யப் பட்டுள்ளார் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause