திமுகவுக்கு வரலாற்றிலேயே கசப்பான வெற்றி !

0
இனிப்பு சாப்பிட்டு கொண்டாடவும் முடியலை. கொண்டாடாமல் இருக்கவும் முடியலை. அப்படி ஒரு சிக்கலான பொசிஷனில் கொண்டு உட்கார வைத்திருக்கி றார்கள் மக்கள் திமுகவை. நாடாளுமன்றத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது திமுக கூட்டணி. ஆனால் சட்டசபையில் ஆட்சியைக் கைப்பற்ற தவறி விட்டது. மறுபக்கம் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. 
திமுகவுக்கு வரலாற்றிலேயே கசப்பான வெற்றி


எனவே அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு திமுகவால் எதையும் பெரிய அளவில் சாதிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டும் கெட்டான் நிலை என்று சொல்வார்களே.. அந்த நிலையில் திமுக வந்திருக்கிறது. மக்களின் கருத்து திமுகவுக்கு சாதகமாகவே இருந்தாலும் கூட சூழல்கள் திமுகவுக்கு சாதகமாக அமையத் தவறி விட்டன.
பெரிய மகிழ்ச்சி

லோக்சபா தேர்தலைப் பொறுத்த வரை திமுக இந்த முறை 23 இடங்களில் போட்டியிட்டு அத்தனையிலும் வெற்றி பெறுகிறது. கூட்டணிக்குக் கிடைத்துள்ள இடங்கள் 37 ஆகும். இது அக்கட்சிக்கு பெரிய சந்தோஷம் தான்.

பெருத்த ஏமாற்றம்

ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை. காரணம், பெரிதும் நம்பிய காங்கிரஸ் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பலத்தைப் பெறத் தவறி விட்டது. வட இந்திய மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். இது திமுகவுக்கும் பெரும் ஏமாற்றம்தான்.

ஆட்சி கவிழும் அபாயம்

மறுபக்கம் தமிழக சட்ட சபையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையை இந்த இடைத் தேர்தல் ஏற்படுத்தி யுள்ளது. திமுகவுக்கு அதிக இடங்களில் அதாவது 13 இடங்களில் வெற்றி கிடைத்தும் கூட அதிமுகவும் 9 தொகுதிகளைப் பிடித்து விட்டது. இதனால் ஆட்சி கவிழும் அபாயம் நீங்கி விட்டது.


கசப்பான வெற்றி

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக அமைந்த காரணத்தால் திமுகவால் தமிழகத்திலும் அடுத்த 2 ஆண்டு களுக்கு எதையும் செய்ய முடியாது. அதேபோல மத்தியிலும் அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. இது நிச்சயம் திமுகவுக்கு மிகப் பெரிய கசப்பான வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை.
அயர்ச்சி

எனவே திமுகவினரைப் பொறுத்த வரை தற்போதைய அதிமுக ஆட்சி முடியும் வரை பொறுத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. அதற்குள் அதாவது அடுத்த 2 ஆண்டு களுக்குள் என்ன வெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற அயர்ச்சி மக்களுக்கும் வந்திருக்கிறது. பார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)