பிளாஸ்டிக் சர்ஜரியின் வியக்கத்தக்க முன்னேற்றம் !

பிளாஸ்டிக் சர்ஜரி என்பது சமீப காலமாக அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. பெரும்பாலும் முகத்தில் காணப்படும் விகாரமான வடுக்களை நீக்க இந்த முறை பயன்படுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி
பிறவியிலேயே ஏற்படும் விகாரங்களையும், விபத்துகளால் ஏற்படும் சீர்குலைவுகளையும் சீர்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு வகை அறுவை சிகிச்சையே பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறப் படுகிறது. 

தீப்புண்கள், வெட்டுக் காயங்கள், அம்மை நோய் போன்ற வற்றால் தோலில் ஏற்படும் விகாரத் தன்மையை பிளாஸ்டிக் சர்ஜரியால் நீக்கலாம். 

சில குழந்தைகளின் மேலுதடு பிளவுபட்டு இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில், பிளவுபட்ட உதட்டை சரி செய்யலாம். பின்னர் பிளவு இருந்தது தெரியாதபடி, அழகுறச் செய்ய முடியும்.
அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி 'காஸ்மெடிக் சர்ஜரி' எனப்படும். அம்மை வடுக்களையும் முகச் சுருக்கங்களையும் நீக்க இந்த முறை பயன்படுகிறது. 

இது போக உதடுகளை சீர் செய்ய, மூக்கை மாற்றி அமைக்கவும் உதவுகிறது. இந்தியாவில் ஆயிரக்கணக் கான வருடங்களு க்கு முன்பே இந்த அறுவை சிகிச்சை இருந்தது. 

பண்டைய காலத்தில் குற்றம் செய்தவர் களுக்கு தண்டனையாக, அவர்களது மூக்கை அரிவதுண்டு. அக்காலத்தில் கன்னங்களில் இருந்து தோலை எடுத்து, புதிதாக மூக்கை உருவாக்கி ஒட்ட வைப்பார்கள். 

இது தான் இந்தியாவின் பிளாஸ்டிக் சர்ஜரி முறை. 19ம் நுாற்றாண்டில் அமெரிக்காவில் தொடங்கப் பட்டது. 

உடலின் ஆரோக்கிய மான பகுதியில் இருந்து தேவையான அளவு தோலை வெட்டி எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டப் படுகிறது.
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
இதற்காக, தோளின் இரண்டு அடுக்குகளை மட்டும் வெட்டி எடுக்கிறார்கள். ஏனென்றால், இந்த அடுக்குகள் மட்டுமே மீண்டும் புத்துயிர் பெற்று வளரும் தனித்தன்மை பெற்றவை ஆகும். 

பிளாஸ்டிக் சர்ஜரி தற்போது மிகப்பெரும் அளவில் வளர்ச்சி பெற்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
Tags: