வேலூர் தேர்தல் ரத்து - துரைமுருகனுக்கு வைத்த குறி !





வேலூர் தேர்தல் ரத்து - துரைமுருகனுக்கு வைத்த குறி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
திமுகவின் நம்பர் டூ தலைவரான துரை முருகனின் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்திருப்பது திமுகவுக்கு விடப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப் படுகிறது. வேலூர் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளது.
துரை முருகனின் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதி


தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதி வேலூர். திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் இங்கு களம் இறக்கப் பட்டுள்ளார். வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப் பட்டதில் இருந்தே கட்சிக்குள் சர்ச்சைதான். இதையும் சமாளித்தே தன் மகனுக்காக வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார் துரைமுருகன்.

இந்த நிலையில் தான் போன மாதம் 29, 30 தேதிகளில் அவரது வீட்டில் ரெயிடு நடத்தப் பட்டது. இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. இதை தவிர கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், திமுக வேட்பாளர் உறவினர் வீடு என பல இடங்களில் சோதனை வேட்டை நடந்தன. குறிப்பாக பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டது.

மாறிய கருத்துக்கள்

மற்றொரு பக்கம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர் களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆகவே இந்த ரெய்டு நடத்தப்பட்ட அன்றே வேலூரில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டது. ரத்து ஆகாது என்று ஒரு தரப்பும், ரத்து ஆகும் என்று ஒரு தரப்பும் மாறி மாறி கருத்துக் களை முன் வைத்த படியே இருந்தன.

வலுவான ஆதாரங்கள்

ஆனால் இப்போது இறுதியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தேர்தலை அங்கு ரத்தே செய்வதாக ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு ரெய்டு நடந்த போது கிடைத்த வலுவான ஆதாரங்களே முக்கிய காரணியாக உள்ளன. இதை யடுத்து வேலூர் மக்களவை தொகுதிக்குள் எந்த பணமும் கைப்பற்றப் படவில்லை என்று துரைமுருகன் சொல்கிறார்.

முதல் காரணம்

இது கண்டிப்பாக திமுகவுக்கு பெரிய அடிதான்.. முதலாவதாக, திமுக வின் மூத்த தலைவர், கட்சியின் பொருளாளர் துரை முருகனின் ஒட்டு மொத்த அரசியல் வளர்ச்சியையே அசைத்து பார்க்கும்படி இந்த அறிவிப்பு உள்ளது.

மைனஸ்
ஏசி சண்முகம்


இரண்டாவது, திமுகவுக்கு இதன் மூலம் பெரிய சரிவு தான். அரசியல் பலம், பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆயிரம் காரணங் களை அதிமுக, பாஜக மீது திணித்தாலும் தனிப்பட்ட முறையில் திமுக வுக்கு ஒருவித மைனஸாகவே இது பார்க்கப் படுகிறது.

யார் தவறு?

மூன்றாவதாக, பணப் புழக்கத்தை கட்டுப் படுத்தாமல் தேர்தலை நிறுத்துவது என்பது தமிழகத்தில் சென்ற முறையிலிருந்து தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியது யார் குற்றம்? என்பது இங்கு கேள்வியாக எழுகிறது.

ஏசி சண்முகம்

நான்காவதாக, வேலூரை போலவே எல்லா தொகுதியிலும் இப்படி ஒரு சோதனை தீவிரமாக நடத்தப் பட்டிருந்தால், கோடிக்கணக் கான பணம் நிச்சயம் பிடிபட்டிருக்கும். அப்படி யானால் எல்லா தொகுதியிலும் மறு தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். 

அதனால் அதிமுக, பாஜகவும்கூட பாதிக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் ஏற்படவே இல்லை. அதனால் தான், இதே வேலூரில் போட்டியிடும் ஏசி சண்முகத்திடம் இல்லாத பணமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

நடவடிக்கை?

ஐந்தாவதாக, 2 வருஷத்துக்கு முன்னாடி ஆர்கே நகரில் இப்படித்தான் பணப்புழக்கம் ஏற்பட்டதாக ஒரு புகார் எழுந்தது. அந்த புகார் அமைச்சர் மீதே எழுந்தது. அமைச்சருடன் சேர்ந்து ஒரு பெயர் பட்டியலும் வெளியானது. இதை யடுத்து அங்கு தேர்தல் ரத்தானது.. ஆனால் மறுபடியும் தேர்தல் நடந்தது. 
நடவடிக்கை


ஆனால் எந்த காரணத்துக் காக தேர்தல் ரத்தானதாக தேர்தல் ஆணையம் அன்று அறிவித்ததோ, அவர்கள் மீது இதுவரை ஒரு சட்ட நடவடிக்கை கூட எடுக்கப்பட வில்லை. இதே தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூரிலும் நடந்தது. இந்நிலையில் வேலூரில் தேர்தலை நிறுத்தி இருப்பது அரசியல் ட்விஸ்ட் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

தள்ளி வைத்துள்ளது

ஆறாவதாக, வேலூர் தொகுதி நேற்று நிலவரம் குறித்து நேற்று காலைதான் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை போயிருக்கிறது. அதன் பின்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை படு வேகமாக தள்ளி வைத்துள்ளது. 

தேர்தல் ஆணையம் இதேபோல பல்வேறு சம்பவங்களிலும் மின்னல் வேகத்தை காட்டுவ தில்லை என்பதே அரசியல் கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. அதையும் சரி செய்ய தேர்தல் ஆணையம் முன்வருமா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)