பெங்களூரில் இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை !

0
பெங்களூரில் திடீர் என்று பெய்த ஆலங்கட்டி மழையால் அங்கு மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இந்தியாவில் எப்போதும் குளிராக இருக்கும் நகரங்களில் ஒன்று பெங்களூர். எவ்வளவு வெயிலான வெப்பநிலை நிலவினாலும் பெங்களூரில் எப்போதும் குளிரான வானிலையே இருக்கும். தற்போது தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.
பெங்களூரில் ஆலங்கட்டி மழை


அதேபோல் தென்னிந்தியா வில் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. இதனால் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கூட கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. கடந்த இரண்டு வாரமாக பெங்களுரில் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. ஆனால் தற்போது கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. 


அதுவும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஏப்ரலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பே வானிலை மையம் கூறி இருந்தது. வடக்கு கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. 

தற்போது பெங்களூரில், சாந்தி நகர், ஜெயநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. பெங்களூர் மட்டு மில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)