தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?

0
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்து க்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், இலங்கையில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கப் போவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. 


அந்த எச்சரிக்கையை யொட்டி இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப் படாததால், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஈஸ்டர் பண்டிகையின் போது, ஏதாவது ஒரு நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங் களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்ட மிட்டுள்ளதாக 6 மாதத்திற்கு முன்பு தகவல் கசிந்துள்ளது. 

தமிழகத்தில் இந்த தாக்குதல் நடத்தப் படலாம் என்று ரகசிய தகவலில் கூறப் பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், தங்கள் தாக்குதல் திட்டத்தை பாதுகாப்பு குறைவாக உள்ள இலங்கைக்கு பயங்கரவாத அமைப்பு மாற்றி இருக்கலாம் என்று தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது பாதுகாப்பு வளையத்தில் வைக்கப் பட்டுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங் களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. நுங்கம் பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடம் ஆகிய வற்றிலும் போலீசார் பாதுகாப்புக் காக நிறுத்தப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)