ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தம் - ஊழியர்கள் போராட்டம் !

0
கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் கேட்ட ரூ.400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது. 
ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தம்


இதனை யடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிக மாக நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை நிறுத்தியதால் 20,000 பணியாளர்கள், அவர்களுடைய குடும்பம் என்னாவது? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. 

ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவினாலும், விமானச் சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று ஜெட் ஏர்வேஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையே நாங்கள் கடந்த 4 மாதங்க ளாகவே சம்பளம் இல்லாமல் தான் பணியாற்றி னோம் என ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சிலர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித் துள்ளனர். 


அவர்கள், தங்களுடைய கடனையும் செலுத்த வில்லை, பள்ளிக்கு கட்டணம் செலுத்த வில்லை என்ற வேதனையை தெரிவித் துள்ளனர். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் மிகவும் மோசமான நெருக்கடி யில் சிக்கிய பின்னர் நிர்வாகம், எங்களை மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் தள்ளி விட்டுள்ளது என்று நூற்றுக் கணக்கான ஊழியர்கள் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.

நிர்வாகம் எங்களுக்கு தெளிவான பதிலை கொடுக்க வில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப் படுகிறது. “இது போன்ற நிலை தொடர்ந் தால் என்ன செய்வது என்பது தெரிய வில்லை. இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை. கைகள் கட்டப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என ஊழியர்கள் தங்களுடைய வேதனையை பதிவு செய்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)