ஒரே தொகுதியான நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் !

0
மக்களவை தேர்தலில் அதிக பட்சமாக தெலங்கானா வின் நிஜாமா பாத்தில் 185 வேட்பாளர்கள் போட்டி யிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது ! நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 துவங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிக பட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலுங்கானா வின் நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள்


தெலுங்கானா வில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந்துள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் திட்டங்கள் அம்மாநில விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தி யுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக 170 விவசாயிகள் இத்தேர்தலில் போட்டி யிடுகின்றனர்.

இங்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டி யிடுகிறார். வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்தல் நடத்துவதற் கான செலவும் அதிகரித்து உள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவிக்கை யில்., நிஜாமாபாத் மக்களவை தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. 

ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 கோடி ரூபாய் என இத்தொகுதியில் தேர்தல் நடத்த மொத்தம் 21 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கை யிலான வேட்பாளர்கள் போட்டி யிடுவதால் கூடுதலாக 14 கோடி ரூபாய் தேவைப் படுகிறது என தெரிவித்துள்ளார். இத்தொகுதி யில் வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் முன்னாதக ஓட்டுச் சீட்டு முறையை பயன்படுத்த திட்டமிடப் பட்டது. 


ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் கூடுதலாக ஓட்டு இயந்திரங் களை பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். ஒரு தொகுதிக்கு இவ்வளவு அதிகமான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது உலகிலேயே இது தான் முதல் முறை என குறிப்பிட்ட அவர், ஓட்டுப் பதிவின் போது மின்னணு இயந்திரங் களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. 

தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிக ஊழியர்கள் தேவைப் படுவதால் அவர்களின் பயணம் மற்றும் அகவிலைப் படிக்கு பெரும் தொகை தேவைப் படுகிறது. இவை அனைத்தையும் கணக்கிடும் போது இத்தொகுதியில் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் வரை செலவிடப் படலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)