116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தமிழக ஆட்சி தப்பிக்கும் !

0
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர் செல்வம் ஆட்சியை விட்டு இறங்கியதும் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 18-ந் தேதி அவர் சட்ட சபையில் பெரும் பான்மையை நிரூபித்தார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அப்போது 122 எம்.எல்.ஏ. -க்கள் ஓட்டளித்தனர். 
116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தப்பிக்கும்


ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டனர். அதன் பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க. -வில் ஓ.பன்னீர் செல்வம் அணியும்- எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றானது. அ.தி.மு.க. -வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. -க்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். 

இதனால் 18 எம்.எல்.ஏ. -க்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். இதன்பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்த காரணங்களால் 4 தொகுதிகள் காலியானது. இப்போதை நிலவரப்படி தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க. -வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் (சபாநாயகர் நீங்கலாக).

தி.மு.க.வுக்கு 88 எம்.எல். ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிக ளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் கடந்த ஒரு ஆண்டாக டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனுடன் இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 


இந்த 3 எம்.எல்.ஏ. -க்களையும் நம்ப முடியாத நிலை உள்ளதால் சட்ட சபையில் நம்பிக்கை யில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க. -வுக்கு எதிராக செயல்பட கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. அரசு தற்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ. -க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

இதற்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுக்கும் விளக்கம் திருப்தி இல்லை என்றால் தகுதி நீக்கம் செய்யப் படுவார்கள் என பரபரப்பாக பேசப் படுகிறது. 22 தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. -வுக்கு 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அப்போது தான் ஆட்சி நீடிக்கும்.

இந்த சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப் படும் போது சட்ட சபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 231 ஆகும். அப்போது பெரும் பான்மைக்கு 116 எம்.எல்.ஏ. -க்கள் இருந்தாலே போதும். இதை வைத்து பார்க்கும் போது குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயித்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)