ஜெயலலிதா உணவுக்கு ரூ. 1.15 கோடி செலவானது எப்படி? விளக்கம் !

0
அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது உணவு வகைக்காக மட்டும் ரூ. 1.15 கோடி செலவானதாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித் திருந்தது. இந்த செலவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உயர் நீதி மன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா உணவுக்கு ரூ. 1.15 கோடி


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த விவகாரத்தை தொடர்ந்து அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச் சாமி தலைமை யில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஆஜராகும்படி ஜெயலலிதா வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆறுமுக சாமி கமிஷனில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் தங்களது மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறி, மருத்துவ ர்களை அனுப்ப அப்போலோ நிர்வாகம் மறுத்து வருகிறது.

ஆறுமுக சாமி கமிஷனில் ஆஜராக தங்களது மருத்துவர் களுக்கு விலக்கு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. 

இதற்கிடையே அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது உணவு வகைக்காக மட்டும் ரூ. 1.15 கோடி செலவான தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித் திருந்தது. இது மாநிலம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை மையப் படுத்தி ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகின.


இந்த நிலையில், ரூ. 1.15 கோடி உணவுக்காக செலவானது குறித்து சென்னை உயர் நீ திமன்றத்தில் அப்போலோ தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. 

அதில், ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார் என்றும், அவரைப் பார்க்க வந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அவர்களது உதவி யாளர்களும் சாப்பிட்ட தால் ரூ. 1.15 கோடி வரைக்கும் செலவான தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)