மெட்ஃபார்மின் மருந்துகள் டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

மெட்ஃபார்மின் மருந்துகள் டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
மெட்ஃபார்மின், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இதயப் பிரச்னைகள் தடுக்கப் படுகிறது. இந்தியர் களைத் தாக்கும் வாழ்வியல் நோய்களில் முக்கிய மானது சர்க்கரை நோய். இதில், டைப்-1 மற்றும் டைப்-2 என இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. 
மெட்ஃபார்மின் மருந்துகள் டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு !


டைப்-2 சர்க்கரை நோயைக் காட்டிலும் டைப்-1 வகை பாதிப்பு உள்ளவர் களுக்கு, இதயப் பிரச்னை ஏற்படுவ தற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மருத்துவர் களின் கருத்து. எனவே, அதை எப்படித் தடுப்பது என்பது பற்றி உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த நியூகேஸ்டல் பல்கலைக்கழக (Newcastle University) ஆய்வாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற் கொண்டனர். அதில், டைப்-1 டயாபட்டீஸ் உள்ளவர்களை எட்டு வாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். 

ஆய்வின் முடிவில், 'மெட்ஃபார்மின்' (Metformin) மருந்துகளை, டைப்-1 சர்க்கரை நோயாளி களுக்குத் தருவதால், அவர்களுக்கு ஏற்படும் இதயப் பிரச்னை களைத் தவிர்க்கலாம் என்பது தெரிய வந்தது. உடலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது தான் மெட்ஃபார்மினின் பணி. 

ஏற்கெனவே, இந்த மருந்துகள் டைப்-2 சர்க்கரை நோயாளி களுக்குப் பரிந்துரைக்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதே போல, நியூகேஸ்டல் பல்கலைக் கழத்தின் ஆய்வில், இதயப் பாதிப்புகள் இல்லாத டைப்-1 டயாபட்டீஸ் நோயாளிகள் 23 பேர் எட்டு வாரங்களுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 'மெட்ஃபார்மின்' மாத்திரைகள் கொடுக்கப் பட்டன. 

கூடவே, எந்தவித உடல் சார்ந்த பாதிப்புகளும் இல்லாத 23 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஆய்வின் தொடக்கத்தில், உடல் சார்ந்த பாதிப்பில்லா தவர்களை விடவும், சர்க்கரை நோயாளி களின் உடலில் 'ஆண்டி -ஆஞ்சியோஜெனிக் மைக்ரோ ஆர்.என்.ஏ.'களின் (anti-angiogenic microRNAs) எண்ணிக்கை அதிகமிருப்பது தெரிய வந்துள்ளது. 


இவை தான், சர்க்கரை நோய்க்கும் அதனால் ஏற்படும் இதயப் பிரச்னைக்கும் அடிப்படைக் காரணம் எனக் கூறப் படுகிறது. இவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு மெட்ஃபார்மின் எடுத்துக் கொண்ட போது, அதன் அளவு சீராகியது தெரிய வந்துள்ளது. 

மைக்ரோ ஆர்.என்.ஏ-வின் வகைகளில், குறிப்பாக இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும் MIRNA-222 அளவு சீராகி யுள்ளது. இந்த ஆய்வுபற்றி நியூகேஸ்டல் பல்கலைக் கழகத்தின் சர்க்கரை நோய் நிபுணர் வீவர் கூறும் போது, "மெட்ஃபார்மின், ரத்த சர்க்கரை அளவை சீர்படுத்துவது போலவே, மைக்ரோ ஆர்.என்.ஏ-அளவையும் சீர்படுத்து கிறது. இதனால், இதயப் பிரச்னைகள் தடுக்கப் படுகின்றன" என்று கூறியுள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause