மாணவருக்கு 1.20 கோடி சம்பளம் அறிவித்த கூகுள் !

0
இணையதளத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது கூகுள். தற்போது அனைத்து துறையினர் சார்ந்த தகவல் களையும் நொடியில் கொடுக்கும் தளமாக உள்ளது கூகுள். இந்நிலையில் மாராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற (21) மாணவர் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
மாணவருக்கு 1.20 கோடி சம்பளம் அறிவித்த கூகுள்


அவர் இணைய தளங்களில் நடத்தப்படும் மென்பொருள் சாப்ட்வேர் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்வார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய மெபொருள் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட அப்துல்லா கான் அந்தப் போட்டியில்,தன் திறமையை சிறப்பாக வெளிப் படுத்தினார்.

இந்நிலையில் அவருக்கு அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பை அளிக்க தயாராக உள்ளதாக கூகுள் நிறுவனம் அவருக்கு மெயில் செய்தது. அந்த மெயிலை பார்த்து அவர் அதிர்ச்சிடைந் துள்ளார். காரணம்: அவருக்கு கூகுள் நிறுவனம் நடத்திய ஆன்லைன் தேர்விலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவர் நேர்முகத் தேர்வுக்கு லண்டன் சென்றார். அதிலும் தேர்ச்சி பெற்றார்.

இதனை யடுத்து அவருக்கு கூகுள் நிறுவனம் அவருக்கு வேலையை வழங்கியது. அப்துல்லா விற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளமாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதத்தில் அவர் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)