தேர்தலில் நிற்க அரசு டாக்டர் வேலையை உதறிய அஞ்சுகம் - ஆறுதல் கூறிய ஸ்டாலின் !





தேர்தலில் நிற்க அரசு டாக்டர் வேலையை உதறிய அஞ்சுகம் - ஆறுதல் கூறிய ஸ்டாலின் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த முறை போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நீலமேகம் என்பவரை வேட்பாளராக அறிவித் துள்ளார் ஸ்டாலின். தேர்தலில் நிற்பதற்காக அரசு டாக்டர் வேலையை உதறியவர் அஞ்சுகம். 
தேர்தலில் நிற்க அரசு டாக்டர் வேலையை உதறிய அஞ்சுகம்


இதுவே கலைஞர் இருந்திருந்தால் கை விட்டிருக்க மாட்டார் அஞ்சுகத்து க்குத் தான் சீட் கிடைத்திருக்கும் என புலம்பி வருகின்றனர் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று 20 நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி களுக்கும் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். 

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு எஸ்.எஸ். பழனி மாணிக்கமும், சட்ட மன்ற தொகுதிக்கு டி.கே.ஜி நீலமேகமும் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர். சட்டமன்றத் தொகுதியைப் பெறுவதற்கு அஞ்சுகம் பூபதி, டி.கே.ஜி. நீலமேகம், சண்.ராமநாதன் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு தான் சீட் கிடைக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. 

அவர்களும் எதிர் பார்த்தனர். ஆனால், அவருக்கு சீட் கொடுக்கப் படாமல் டி.கே.ஜி நீலமேகம் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இது அஞ்சுகத்தின் ஆதரவாளர் களையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் களிடம் விசாரித்தோம், அஞ்சுகத்தின் அப்பா பூபதி மறைந்த தலைவர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்ததோடு அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். எங்கள் குடும்பமே தி.மு.க-வுக்கு விசுவாசமான குடும்பம். கருணாநிதி மேல் கொண்ட பற்றால் தன் மகளுக்கு அஞ்சுகம் என பெயர் வைத்தார். 

அஞ்சுகம் டாக்டருக்கு படித்து அரசு மருத்துவ மனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அஞ்சுகத்தை அழைத்த கலைஞர் நீ தாம்மா தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் போய் வேலையை தொடங்கு என அனுப்பி வைத்தார். பல பிரபலங்கள் இருக்கும் போது புதுமுகமான அஞ்சுகத்து க்கு வாய்ப் பளித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

அஞ்சுகமும் டாக்டர் வேலையை உதறி விட்டு தேர்தல் பணி யாற்றினார்; வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது; கருத்து கணிப்புகளும் இதைத் தெரிவித்தன. ஆனால், எங்களுடைய ஆகாத நேரம் அ.தி.மு.க-வினர் பணம் கொடுத்த விவகாரத்தால் தேர்தல் நிறுத்தப் பட்டது. அதன் பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் அஞ்சுகம் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். 

பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின், 'நான் இங்கு போட்டி யிடுவதாக நினைத்து வாக்களித்து அஞ்சுகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்' எனப் பேசினார். ஆனால், அ.தி.மு.க-வினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தது, தி.மு.க நிர்வாகிகள் ஒத்துழைப்பு தராதது போன்ற காரணங்க ளால் வெற்றி பறிபோனது. இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்டாலும் குடும்ப வாழ்கையை விட கட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபட்டார். 

மேலும், இந்த முறை எல்லா வகையிலும் சாதகமாக இருக்கிறது. அவருக்கு தான் சீட் கிடைக்கும் என நம்பி காத்திருந்தோம். வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது'' என்றனர். மேலும், பேசிய சிலர் தலைவர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக் கிழமையே அஞ்சுகம் மற்றும் அவரின் அம்மாவை சென்னைக்கு அழைத்துப் பேசினார். 
தேர்தலில் நிற்க அரசு டாக்டர் வேலையை உதறிய அஞ்சுகம்


இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை வேறு ஒருவருக்குத் தான் சீட் எனக் கூறினார். இருந்த அரசு வேலையையும் விட்டு விட்டேன். இக்கட்டான நிலையில் சீட் கொடுத்தீர்கள். இது ஜெயிக்கிற நேரம், இப்போது சீட் இல்லை என்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வினர் பணத்தால் அடித்து நம் வெற்றி வாய்ப்பை பறித்தனர். 

இந்த முறை அ.தி.மு.க., அ,ம,மு,க என இரு பிரிவுகளாக நிற்கிறார்கள் பணம் பெரிய அளவில் விளையாடும் இதை உங்களால் தாங்க முடியாது. லோக்கல் நிர்வாகி களும் உங்களுக்கு எதிர்ப்பாக உள்ளனர். அதனால் சீட் வேறு ஒருவருக்குத் தான். உங்களுக்கு நான் இருக்கிறேன். நிச்சயம் கைவிட மாட்டேன் பெரிதாகச் செய்வேன் கவலை கொள்ள வேண்டாம் என அன்பான வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்துள்ளார். 

இப்போதைக்கு அவர் கூறிய வார்த்தைகள் தான் அஞ்கத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப் பட்டவுடன் பலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, `என்னாச்சு அஞ்சுகம் தான் வேட்பாளர்னு பேசப் பட்டது' என அனுதாபத்தில் விசாரித்து வருகின்றனர். எதிர் பார்க்காத நேரத்தில் வேட்பாளராக நிறுத்தப் பட்டவர் எதிர் பார்த்த நேரத்தில் நிறுத்தப்பட வில்லை. 

இதுவே கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக கை விட்டிருக்க மாட்டார்'' என வேதனையுடன் தெரிவித்தனர். லோக்கல் தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம், ``எத்தனையோ பெரிய தலைகள் இருக்கும்போது தலைவர் அஞ்சுகத்துக்கு வாய்ப்பளித்தார். இதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. கட்சியின் சீனியர்களை மதிக்காமல் செயல்பட்டார். 

இது ஒரு புறம் இருந்தாலும் மினி சட்டமன்றத் தேர்தல் போல் நடக்கும் இந்த இடைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியின் வெற்றி என்பதும் மிக முக்கியம். அதனால் தான் வேட்பாளரை மாற்றி அறிவித்துள்ளார்" ஸ்டாலின் என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)