திமுக - காங்கிரஸ் ஜாதகம் ஒன்னும் செட் ஆகல - எச்.ராஜா ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

திமுக - காங்கிரஸ் ஜாதகம் ஒன்னும் செட் ஆகல - எச்.ராஜா !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. பாஜக மேலிடம் நேற்று தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 
திமுக - காங்கிரஸ் ஜாதகம் ஒன்னும் செட் ஆகல


அதன்படி தூத்துக்குடி யில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியா குமரியில் பொன். ராதா கிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதா கிருஷ்ணன், ராம நாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டி யிடுகிறார்கள்.

இந்நிலையில் இன்று செய்தி யாளர்களுக்கு பேட்டி கொடுத்த எச்.ராஜா, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜோசியர் களிடம் கொடுத்து ஜாதகம் பார்த்தேன். இந்த கூட்டணிக்கு கொஞ்சம் கூட வெற்றி வாய்ப்பு கிடையாது. இவர்களில் தேர்தலில் வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட கிடையாது. ஜோசியர்கள் இதைத் தான் சொல்கிறார்கள்.

அதனால் பாஜக - அதிமுக கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும். எச்.ராஜா ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினின் ஜாதகத்தின்படி அவரால் முதல்வராகவே முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause