பாலியல் வழக்கில் எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை !

0
பொள்ளாச்சி பாலீயல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை மாவட்ட எஸ்பி பாண்டிய ராஜன் செய்தி யாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது கடும் விமர்சனங் களுக்கு உள்ளானது.
பாலியல் வழக்கில் எஸ்பி மீது அதிரடி
பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் தகவலை வெளிப்படுத்திய, காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது தவறு. இந்த நடவடிக்கை யால், அந்தப் பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். 

இதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இடைக்கால நிவாரண மாக 25 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், பலாத்காரம் தொடர்பாக, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே வெளியாகி யுள்ளதாகவும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என்றும் உடனடியாக விசாரணை நடத்தாமல் அறிவித்த தோடு, 

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக, அடையாளங் களை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப் பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)