ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன?

நம்மில் பலர் ஸ்மைலிங் டிப்ரஷன் என்ற ஒருவகை மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருப்போம். ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன, அதற்குத் தீர்வு என்ன எனப் பார்ப்போம். 
ஸ்மைலிங் டிப்ரஷன்


20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தி னாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பலவித நோய் தாக்குதல் களுக்கு இன்று மருத்துவத்தில் தீர்வு உண்டு.

இது விஞ்ஞானத்தின் முன்னேற்றம். வருமுன் காப்பதற்கும் பல தீர்வுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவைதான் தடுப்பு ஊசிகள், சத்து மாத்திரைகள், உணவு முறைகள், சுகாதாரச் சூழ்நிலை என உருவாயின. 

ஆயினும் மக்கள் அதிகமாக நோய் வாய்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். வெளியே சொல்ல முடியாத மன அழுத்தம் இன்னமும் ஆபத்தானது. உள்ளே அழுது கொண்டு வெளியே சிரிப்பதுதான் இது.

இதனை ’ஸ்மைலிங் டிப்ரஷன்’ என்பர். நாம் தினமும் நம் அலுவல வேலை செய்யும் போது இந்த விரும்பத்தகாத எண்ணங்கள் ஒருபக்கம் ஓடிக்கொண்டி ருக்கும். 

இந்த கெட்ட எண்ணங்களை நாம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாம் இவற்றுடனே வாழப் பழகி விடுவோம்.

சரி, இதற்குத் தீர்வென்ன எனப் பார்ப்போம். மனஅழுத்தம் சற்று கூடும் பொழுது சிறிது நேரம் அமைதியாய் மூச்சு விடுங்கள். நமது வேகஸ் நரம்பு ஐம்புலன் களோடு சம்பந்தப் பட்டது. 

ஒரு வரை சற்று அமைதிப் படுத்திக் கொள்ள அறியும் பொழுது உடல் நலம் எந்த விதத்திலும் பாதிப்பு அடையாது. நம்மால் அமைதியின் மூலமே பல செயல்களை சாதிக்க முடியும் என்பதனை உணரவேண்டும்.

புகை, மதுவை கைவிடுங்கள். தினமும் அரை மணி நேரமாவது உடற் பயிற்சி செய்யுங்கள். குழந்தைக ளுடன் விளை யாடுங்கள்.

இவ்வாறு செய்து வர இந்த கெட்ட எண்ணெங்கள் ஒருநாள் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியே சென்று விடும்.
Tags: