இந்தோனேசியாவில் பாம்பை கொத்த விட்டு கைதி டார்ச்சர் - கொடூரம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

இந்தோனேசியாவில் பாம்பை கொத்த விட்டு கைதி டார்ச்சர் - கொடூரம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
இந்தோனேஷியா வில் பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை, மொபைல் போனைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு இந்தோனேசிய போலீஸார் கைது செய்தனர். அவனிட மிருந்து உண்மையை வரவழைப்ப தற்காக, அவனது கைகள் இரண்டையும் பின்புறமாகக் கட்டி, அவனது கழுத்தில் பாம்பு ஒன்றை சுருக்குபோல போட்டு பயமுறுத்தியபடி விசாரித் துள்ளனர்.
பாம்பை கொத்த விட்டு கைதி டார்ச்சர்


பாம்பால் கொத்த விட்டு கைதியை டார்ச்சர் செய்த போலீஸ்- இந்தோனேசியா வில் நடந்த கொடூரம் விசாரணைக் கைதி ஒருவரிடம் இந்தோனேசிய போலீஸார் நடத்திய கொடூரமான விசாரணை, சமூக வலை தளங்களில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது. 

இந்தோனேசியா வில் பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை, மொபைல் போனைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு இந்தோனேசிய போலீஸார் கைது செய்தனர். அவனிடமிருந்து உண்மையை வரவழைப்ப தற்காக, அவனது கைகள் இரண்டையும் பின்புறமாகக் கட்டி, 

அவனது கழுத்தில் பாம்பு ஒன்றை சுருக்கு போல போட்டு பயமுறுத்திய படி விசாரித் துள்ளனர். இந்த விசாரணைக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் ஏற்ற, அது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோக் காட்சியில், விசாரணைக் கைதியின் கழுத்தில் சுமார் எட்டடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்றை மாலைபோலச் சுற்றிப் போட்டுள் ளார்கள். அந்தப் பாம்பைக் கண்டு பயத்தில் கைதி அலறுகிறான். கைகள் கட்டப் பட்டுள்ளதால் அவனால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. 

ஒரு காவல்துறை அதிகாரி அந்தக் கைதியின் அருகில் வருகிறார். அந்தப் பாம்பின் வாலைப்பிடித்து கைதியின் வாயில் விட, கைதி கண்களை மூடிக்கொண்டு பீதியில் அலறுகிறார். அதோடு நிறுத்தாமல், அந்தப் பாம்பின் கழுத்துப் பகுதியைப் பிடித்து அதன் தலையால் கைதியின் முகத்தில் கொத்த விட்டபடி விசாரணை நடத்துகிறார்கள். 

அப்போது கைதி அலறுவது கேட்டு அங்குள்ள மற்ற போலீஸ் அதிகாரிகளும் மொத்தமாகச் சிரிக்கிறார்கள். அடுத்ததாக அந்தப் பாம்பை கைதியின் காலைக் கடிக்க விடுவது போல தரையில் நெளியவிட்டு அவனை அலற விடுகிறார்கள். மேலும், அவனது ஜீன்ஸ் பேன்டினுள் பாம்பை நுழைய விட்டும் பயமுறுத்து கிறார்கள்.
பாம்பின் வகை


இந்த விசாரணையின் போதே அவனிடம், `எத்தனை முறை மொபைல் போன்களைத் திருடி யிருக்கிறாய்?’ என்று காவல்துறை அதிகாரி விசாரிக்கிறார். அதற்கு அவன், `இரண்டு முறை திருடி யிருக்கிறேன்’’ என்று பதில் தருகிறான். இப்படிச் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரிப்பதில் இத்தனை கொடூரத் தன்மையுடன் செயல் பட்டிருப்பதும் அதை வீடியோவாக எடுத்து வெளி யிட்டிருப்பதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பாம்பைக் கொத்த விட்டு விசாரிக்கும் இந்த வீடியோ உடனடியாக உலக அளவில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது. பகிர்ந்த அனைவருமே இந்த விசாரணை முறை அப்பட்டமான மனித உரிமை மீறலாக இருப்பதாகத் தங்களது கண்டனங் களைப் பதிவுசெய்தனர். இன வெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப் பட்டிருப்ப தாகவும் மனித உரிமை செயற் பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.

உலகம் முழுவதும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தோனேசிய காவல்துறை இந்த விசாரணை முறைக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்தது. மேலும், இந்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் துள்ளது. 

இந்தோனேசி யாவில் கைதிகளைப் பாம்பால் கொத்த விட்டு கொடூரமான முறையில் விசாரணை நடத்துவது முதல்முறை அல்ல என்றும், ஏற்கெனவே பப்புவா மற்றும் மேற்கு பப்புவா பகுதிகளைச் சேர்ந்த கைதிகளை இதேபோன்று விசாரித் துள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில், மேற்கு பாப்புவா தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்த போது, அவரையும் தனியறையில் அடைத்து பாம்பால் கொத்த விட்டிருப்பதாக இந்தோனேசிய காவல் துறை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
பப்புவா - Thief With Live SNAKE


ஜெயவிஜயா மாவட்டத்தில் நடைபெற்ற சிறிய திருட்டுச் சம்பவத்துக் காக இத்தகைய கொடுமையான தண்டனை கொடுக்கப் பட்டிருப்பதை காவல் துறையினர் தெரிவித்தனர். எனினும், அந்த அதிகாரி களைக் காக்கும் நோக்கில், ``அந்தப் பாம்பு விஷத் தன்மையற்றது என்றும், கைது செய்யப்பட்ட திருடனை அந்தப் பாம்பு கொத்த வில்லை’’ என்றும் குறிப்பிட்டனர். 

மேலும், ``இது போன்ற மனிதத் தன்மையற்ற முறையிலான விசாரணையை நாங்கள் ஊக்கப் படுத்துவ தில்லை என்றும், இனி இது போன்ற முறையில் விசாரணைகள் நடத்தப் படமாட்டாது என உறுதி யளிக்கிறோம்’’ என்றும் கூறினார்கள்.
வீடியோ...

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close