இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர் !

0
சவுதி – பாகிஸ்தான் இடையிலான உறவு வலுபெற்று வருகிறது. முதல் அரசுப் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்ற முகமது பின் சல்மானுக்கு, பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்’ வழங்கப் பட்டுள்ளது. 
இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர்
மேலும், இரு நாடுகளிடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. இந்த இணக்கம், மற்ற உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.


இன்று வரை நியாயம் கிடைக்கப் பெறாத பத்திரிகை யாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை வழக்கு, சவுதி இளவரசரின் அரசியல் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக மாறி விட்டது. உலக நாடுகள், சவுதி அரசுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பொறுப் பேற்றார். 

நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தத்தளிப்பதாக இம்ராம்கான் அறிவித்தார். அரசு உடைமைகளை ஏலத்துக்கு விட்டார். ஆனாலும் போதுமான தொகை ஈட்ட முடிய வில்லை என வருத்தம் தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில், பாகிஸ்தானுக்கு கை கொடுக்க சவுதி முன்வந்தது.
சவுதி இளவரசர் முகமது பின்சல்மான்
பாகிஸ்தானு க்கு 6 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது. மேலும், பாகிஸ்தானின் கவாடார் பகுதியில் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை உருவாக்க 10 பில்லியன் டாலர் கடன் கொடுப்ப தாகவும் தெரிவித்தது. தீவிரவாத த்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக, பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. 

சவுதி இளவரசர் சல்மானுக்கு, பத்திரிகை யாளர் ஜமால் படுகொலையில் சம்பந்தம் இருப்பதாக துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், பாகிஸ்தானும் சவுதியும் இணக்கம் காட்டுவது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.


மேலும், ஜமால் விவகாரத்து க்குப் பிறகு உலக நாடுகள் உடனான உறவை பலப்படுத்து வதில் சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் அக்கறை காட்டி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித் துள்ளன. அதனை உண்மை யாக்கும் விதமாக, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சல்மான் ஆசியா வந்துள்ளார். 
பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான்
நேற்று பாகிஸ்தான் சென்ற அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப் பட்டது. போதா தென்று இஸ்லாமாபாத் சாலை யெங்கும் சல்மானை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைக்கப் படிருந்தன. இஸ்லாமா பாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார். 

அப்போது, இரு நாடுகளு க்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டன. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் இளவரசர் சல்மான், இம்ரான் கானை புகழ்ந்து பேசினார். `` இம்ரான் கானைப் போல ஒரு பிரதமருக் காகத்தான் பாகிஸ்தான் மக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். 

இனி பொருளா தாரம் உட்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் வளர்ச்சி யடையும். சவுதியின் அன்பு நாடு பாகிஸ்தான்’’ என்றெல்லாம் புகழாரம் சூட்டினார். இதனால் உலக நாடுகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 


மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பையும் சல்மான் வெளி யிட்டிருக் கிறார். கடுமையான தண்டனை களுக்குப் பேர்போன சவுதியில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 2107 பாகிஸ்தான் பிரஜைகளை விடுதலை செய்ய ப்போவதாக அறிவித் துள்ளார். 
இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர்
இம்ரான்கானின் வேண்டு கோளுக்கு இணங்க 2,107 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய சவுதி சிறை அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பித் துள்ளார். இந்தச் செய்தியை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் ட்விட்டரில் தெரிவித் திருக்கிறார். 

சவுதி – பாகிஸ்தானின் இந்த திடீர் நெருக்கம், குறிப்பாக அமெரிக்காவை அதிர்ச்சி க்குள் ஆழ்த்தி யுள்ளது என்கின்றனர், உலக அரசியல் விமர்சகர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)