கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர் !

0
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எந்த விமர்சனங் களுக்கும் தக்க பதிலடி கொடுப்பவர். இன்று காலையில் சென்னை மாநில கல்லூரி மாணவர்க ளுடன் இணைந்து அவர் கிரிக்கெட் விளையாடிய காட்சி தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்


அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் சென்னை மாநில கல்லூரிக்கு சென்றார். அப்போது அவருடன் அதிகாரிகளும் இருந்தனர். மைதனத்து க்குள் சென்ற அவர் மாணர்வர் களிடம் மட்டையை வாங்கி கெத்தாக களத்தில், கிரீஸில் நின்றார்.

பின்னர் மாணவர் ஒருவர் வீசிய பந்துக்கு அசத்தலாக அடித்து விளையாடி னார். தொடர்ந்து மாணவர் பந்து வீச... அதற்கு சரியாக மட்டையை பயன்படுத்தி விளாசினார்.

சுற்றி நின்ற அதிகாரிகள் அமைச்சரை உற்சாகப் படுத்த அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இது அங்குள்ள மாணவர் களுக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு அவருக்கு பந்து வீசினர்.தற்போது இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)