விமானத்தில் தூங்கிய விமானி - வைரல் வீடியோ !

0
விமானம் நடுவானில் இருந்த போது தூங்கிய விமானிக்கு தண்டனை. வைரல் ஆகிவரும் வீடியோ பதிவு. சீன விமானி ஒருவர் தனது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது
விமானத்தில் தூங்கிய விமானி
தனது இருப்பிடத்தில் இருந்த படியே உறங்கிய காட்சிகள் அவருடன் இருந்த மற்றொரு விமானியால் வீடியோ எடுக்கப்பட்டு பகிரப்பட்டது.


சீனாவில் மிகவும் பிரபலமான இந்த வீடியோ காட்சி, போய்ங் 747 விமானத்தை ஓட்டிய விமானிக ளால் எடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

அதை தொடர்ந்து 20 வருட அனுபவமுள்ள விமானியான வெங் ஜியாகியூய் (Weng Jiaqi) இந்த கவனக் குறைவுக்காக தண்டிக்கப் பட்டார்.

மேலும் அந்த விமானி தூங்கியதை பதிவு செய்து இணையத் தில் வெளியிட்ட துணை விமானியும் தண்டிக்கப் பட்டார்.

அந்த வீடியோவில். தண்டிக்கப் பட்ட விமானி இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு துங்குவதை காணலாம்.

இது பற்றி அந்த விமான நிறுவனம் கூறியதாவது, 

'அந்த விமானியே தான் செய்தது தவறு என அறிந்து விட்டார், ஆனாலும் இந்த சம்பவத்தில் உடன் இருந்த விமானியும் தண்டிக்கப் பட்டுள்ளார்.

எங்களை பொருத்தவரை விமானத்தின் பாதுகாப்பே முக்கிய மானது' என சீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.
வீடியோ...

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)