ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை முடிக்க போகிறோம் - ஆறுமுகசாமி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை முடிக்க போகிறோம் - ஆறுமுகசாமி !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப் பட்டிருந்தது. 
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை


அதில் கூறப்பட்டிருந் ததாவது: ஜெயலலிதா மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற் கான காரணம் ஆகியவற்றை கண்டறிய ஆணையம் அமைக்கப் பட்டது.

ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர் களின் விளக்கத்தை பதிவு செய்து கொள்ள, 21 துறைகளை சார்ந்த மருத்துவர் களைக் கொண்ட குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஆணையம் நிராகரித்து விட்டது.

எனவே, அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சை யாக செயல்படக் கூடிய மருத்துவர் களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணை யத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை யுடன் மற்றொரு வழக்கும் தொடரப் பட்டது என்று அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பானது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித் துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில் தெரிவிக்கப் பட்டிருப்ப தாவது:ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத் தின் விசாரணையை தடுக்க வழக்கு தொடரப் பட்டு உள்ளது. ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.


2016ம் செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை அப்போலோ மருத்துவ மனையில் நடைபெற்ற அனைத்தையும் விசாரிக்கும் அதிகாரம் ஆணையத் துக்கு இருக்கிறது. மருத்துவ வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது தவறு. நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

விசாரணையின் போது, ஆறுமுக சாமியின் ஆணையத்துக்கு மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அப்போலோ மருத்துவ மனை தரப்பில் கேட்கப்பட்டது. இதை யடுத்து,இந்த வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close