விவேக் வீட்டில் ஜெயலலிதா - இனி எல்லாப் பிரச்னையும் தீரும் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

விவேக் வீட்டில் ஜெயலலிதா - இனி எல்லாப் பிரச்னையும் தீரும் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
இளவரசி மகனும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனு க்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு `ஜெயலலிதா' எனப் பெயர் வைக்க உள்ளனர். `இனி அரசியல் ரீதியாக நமக்கான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்' என நம்பிக்கை தெரிவித் திருக்கிறார் சசிகலா.
Jayalalitha in Vivek's house - விவேக் வீட்டில் ஜெயலலிதா
ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் சி.இ.ஓ-வாக இருக்கிறார் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்ற காலத்தில் தான் மீடியாக்களின் வெளிச்சத்துக்கு வந்தார் விவேக். 


அதுவும், `ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் விவேக் வேறு யாருமல்ல, இளவரசியின் மகன் தான்' என முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளியுலகின் தொடர்புக்கு அவர் வந்தார். ஜெயலலிதாவின் மைசூரு தோட்டத்தில் விவேக்கின் தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி இறந்து போனார். 

அன்றிலிருந்து போயஸ் கார்டன் முகவரியில் தான் விவேக்கும் அவரின் சகோதரிகளும் வசித்து வந்தனர். தனிப்பட்ட முறையிலும் விவேக் மீது அதிக பாசம் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது திருமணத்தின் போது, சசிகலா உறவினர்கள் திரள்வார்கள் என்பதால் அந்த நிகழ்வில் பங்கேற்காமல் கார்டனிலேயே இருந்தார் ஜெயலலிதா.
சசிகலா
திருமணம் முடிந்து போயஸ் கார்டன் வந்த விவேக்குக்குப் பரிசு ஒன்றையும் அளித்தார். அவரது மரணத்துக்குப் பிறகு தினகரன் தரப்பினரோடு முரண்பட்டார் விவேக். போயஸ் கார்டன் ரெய்டு சம்பவத்தில் நேரடியாக மீடியாக்களை சந்தித்துப் பேசினார் விவேக். இதைத் தினகரன் தரப்பினர் ரசிக்க வில்லை. 

தொடர்ச்சி யாக, ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியானதிலும் இளவரசி குடும்பத்தி னருக்கு உடன் பாடில்லை. இது தொடர்பாக நேரடியான விமர்சனங் களை தினகரன் மீது முன் வைத்தனர். இது குறித்து சசிகலாவின் கவனத்து க்கும் கொண்டு சென்றனர். 


இதனால் கடும் கொந்தளிப்பை வெளிப் படுத்தினார் தினகரன். இதன் தொடர்ச்சி யாக, சசிகலாவின் சமசரப் பேச்சால் வர்த்தகத்தை மட்டும் கவனித்து வருகிறார் விவேக். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை சசிகலாவிட மும் இளவரசியிடமும் தெரிவித்துள்ளனர் விவேக் தரப்பினர். 
விவேக் மகள் ஜெயலலிதா
இதனால் உற்சாகமடைந்த சசிகலா, `இனி நமக்கு எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நமக்கு சாதகமாக மாறும்' என சென்டி மென்டாகக் கூறி யிருக்கிறார். குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கி யிருக்கிறார் விவேக். 

அப்போது பேசிய சசிகலா, `உனக்குப் பெண் குழந்தை தான் பிறக்கும். அக்காவே உன் வீட்டில் வந்து பிறப்பார்' எனக் கூறி யிருக்கிறார். இந்தச் சென்டிமென்ட் காரணமாக, குழந்தைக்கு `ஜெயலலிதா' எனப் பெயர் வைக்கத் திட்ட மிட்டிருக்கிறார் விவேக் ஜெயராமன்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close